முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை வென்ற சரவணன் அருள் – “தி லெஜண்ட் படம்” 7 நாள் முடிவில் அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.?

the-legend
the-legend

சரவணா ஸ்டோர் ஓனர் சரவணன் அருள் தனது கடை விளம்பரத்திற்காக மட்டுமே நடித்து வந்தார். இவர் திடீரென சினிமாவில் ஹீரோவாக விஸ்வரூபம் எடுத்துள்ளார். ஜேடி – ஜெரி இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் லெஜண்ட்.இந்த படம் முழுக்க முழுக்க ஆக்சன் காமெடி அனைத்தும் கலந்ததாக இருந்ததால் தற்பொழுது படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

உலகம் முழுவதும் 2500 திரையரங்களிலும் தமிழகத்தில் 800 திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. முதல் நாளில் கோடிக்கணக்கில் வசூல் செய்ததால் அடுத்தடுத்த நாட்களிலும் நல்ல வசூல் செய்து வருகிறது. இந்த படத்தில் சரவணன் அவர்களுடன் கைகோர்த்து யோகி பாபு, பிரபு, விவேக், மயில்சாமி , ஊர்வசி ரவுத்தேலா மற்றும் பல பிரபலங்கள் நடித்து அசத்தியுள்ளனர்.

படம் தொடர்ந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கூடிக் கொண்டிருக்கிறது இன்னும் இந்த திரைப்படம் பல்வேறு திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக்கொண்டிருப்பதால் வருகின்ற நாட்களிலும் நல்ல வசூலை அள்ளும் என தெரிய வருகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் தி லெஜெண்ட் திரைப்படம் ஏழு நாள் முடிவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி பார்க்கையில் ஏழு நாள் முடிவில் சுமார் 7.7 கோடி வசூல் செய்து உள்ளதாக தெரிய வருகிறது. வருகின்ற நாட்களில் பெரிய ஹீரோக்களின் படங்கள் ஒன்றும் வெளியாகாமல் இருந்தால் நிச்சயம் நல்லதொரு வசூலை தி லெஜன்ட் படம் அள்ளும் என தெரிய வருகிறது.

இதனால் படக்குழுவும் சரி அறிமுக நடிகர் சரவணன் அருள் அவர்களும் சரி தற்போது செம்ம சந்தோஷத்தில் இருக்கின்றனர். முதல் படமே வெற்றிகரமான படமாக இருப்பாதால் சரவணன் அவர்கள் அடுத்தடுத்த படங்களில் நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அவருக்கென ஒரு ரசிகர் கூட்டம் உருவாக தொடங்கியுள்ளது.