“விருமன்” திரைப்படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா.?

viruman
viruman

இயக்குனர் முத்தையா பெரிதும் கிராமத்து பின்னணியில் இருக்கும் படங்களை இயக்கி வெற்றி கண்டு வருகிறார். அந்த வகையில் கார்த்தியுடன் இணைந்து கொம்பன் எனும் ஹிட் கொடுத்தார். அதைத்தொடர்ந்து தற்பொழுது  இரண்டாவது முறையாக கார்த்தியுடன் கைகோர்த்து விருமன் எனும் படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படம் நேற்று திரையரங்கில் வெளியாகி சிறப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. படத்தில் கார்த்தி உடன் முதன்முறையாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடித்து உள்ளார். மேலும் அவர்களுடன் இணைந்து சூரி, பிரகாஷ்ராஜ், சரண்யா பொன்வண்ணன், சிங்கம் புலி போன்ற பல நடிகர் நடிகைகளும் நடித்துள்ளனர்.

படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படக்குழுவில் பணியாற்றிய பலரும் கலந்து கொண்டனர். அப்போது கூட ஒரு சிலர் படம் அருமையாக வந்துள்ளது. அதனால் இந்த படத்திற்கு கண்டிப்பாக விருது கிடைக்கும் என அடித்து கூறினர். மேலும் இந்த படத்தில் அதிதி சங்கர் முதல் முறையாக நடித்துள்ளதால் அவரது நடிப்பு பற்றி பலரும் கமெண்ட்களை தெரிவித்து வருகின்றனர்.

அவர்கள் கூறுவது இந்த ஹீரோயின் முதல் படத்தில் நடிப்பது போலவே தெரியவில்லை அந்த அளவிற்கு இவர் நடிப்பு சிறப்பாக இருக்கு என புகழ்ந்து பேசி வருகின்றனர். நேற்று வெளியான விருமன் படத்தை காண பிரபலங்கள் முதல் கொண்டு ரசிகர்கள் வரை பலரும் திரையரங்கை நாடி வருகின்றனர்.

படத்தின் ஹீரோயின் அதிதி சங்கர் கூட ரோகிணி திரையரங்கிற்கு சென்று ரசிகர்களுடன் விருமன் படத்தை பார்த்துள்ளார். இந்த நிலையில் தற்போது விருமன் படம் முதல் நாளில் எவ்வளவு வசூல் அள்ளியுள்ளது என்பது குறித்த தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி பார்க்கையில் முதல் நாளில் இந்த படம் 5.5 கோடி வரை வசூல் செய்துள்ளது எனக் கூறப்படுகிறது.