தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ் இவர் படங்களில் நடிப்பதையும் தாண்டி பல்வேறு படங்களை தயாரித்தும் வருகிறார் இதனால் நடிகர் தனுஷ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு நபராக இருக்கிறார். மேலும் இவரது மார்க்கெட் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ஓரிரு திரைப்படங்கள் தோல்வி படங்களாக அமைந்தன இதிலிருந்து தன்னை மாற்றிக் கொள்ள நடிகர் தனுஷ் தொடர்ந்து சிறந்த இயக்குனர்களுடன் கதை கேட்டு நடித்து வருகிறார். அந்த வகையில் மித்ரன் ஜவகர் உடன் கைகோர்த்து இவர் நடித்த திரைப்படம் திருச்சிற்றம்பலம்.
இந்தப் படம் வெளியாகி தற்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் தனுஷ் உடன் கைகோர்த்து நித்யா மேனன், ராசி கண்ணா, பிரியா பவானி சங்கர், பிரகாஷ்ராஜ், பாரதிராஜா மற்றும் பல நடிகர் நடிகைகள் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் பின்னி பெடலெடுத்து உள்ளனர்.
தொடர்ந்து இந்த படம் ஹவுஸ் ஃபுல்லாக திரையரங்கில் ஓடிக்கொண்டிருப்பதால் வசூல் வேட்டை நன்றாகவே நடத்தி வருகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் தனுஷின் திருச்சிற்றம்பலம் திரைப்படம் மூன்று நாள் முடிவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது அதன்படி பார்கையில் திருச்சிற்றம்பலம் திரைப்படம் 23 கோடி வசூல் அள்ளி உள்ளதாக கூறப்படுகிறது.
உலக அளவில் 32 கோடி அள்ளி உள்ளதாம். வருகின்ற நாட்களிலும் பெரிய நடிகரின் படங்கள் இல்லாததால் அது திருச்சிற்றம்பலம் படத்திற்கு சாதகமாக அமைந்துள்ளது. இதனால் நிச்சயமாக இந்த படம் பெரிய அளவில் வசூல் வேட்டை நடத்தும் என பட குழு கணித்துள்ளது மேலும் படக்குழுவும் சரி, தனுஷூம் சரி செம்ம சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர்.