நடிகர் அஜித்துக்கு ஒருவரை பிடித்து விட்டால் அவருடன் தொடர்ந்து படம் பண்ணுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் சிறுத்தை சிவாவை தொடர்ந்து ஹச். வினோத்துடன் தொடர்ந்து மூன்று படம் பண்ணினார். அந்த மூன்று படங்களுமே மக்களுக்கு நல்ல கருத்துக்களை எடுத்துக் கொடுக்கக்கூடிய ஒரு படமாக இருந்ததால்..
படம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக வெற்றி பெற்றன. இப்படி இருக்கின்ற நிலையில் அந்த மூன்று திரைப்படமும் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து துல்லியமாக பார்க்க இருக்கிறோம்.. நடிகர் அஜித் ஹச். வினோத்துடன் முதல் முறையாக கைகோர்த்து நடித்த திரைப்படம் நேர்கொண்ட பார்வை இந்த படம் முழுக்க முழுக்க ஒரு ரீமேக் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படம் பெண்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் படமாக இருந்தால் வெளிவந்து மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று நீண்ட நாட்கள் ஓடியதோடு மட்டுமல்லாமல் வசூலில் 215 கோடிக்கு மேல் வசூல் அள்ளி அசத்தியது. இதனைத் தொடர்ந்து உடனடியாக இந்த கூட்டணி வலிமை திரைப்படத்தில் இணைந்தது இந்த திரைப்படம் முழுக்க முழுக்க ஆக்சன் மற்றும் திரில்லர் படமாக உருவானது.
இந்த படமும் பெண்களுக்கு தேவையான ஒரு விழிப்புணர்வு படமாக இருந்ததால் குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் வலிமை திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது உலக அளவில் சுமார் 250 கோடிக்கு மேல் வசூல் அள்ளி அசத்தியது. சிறு இடைவெளிக்கு பிறகு மீண்டும் இந்த கூட்டணி அமைந்து துணிவு படத்தில் சேர்ந்தது.
இந்த படம் முழுக்க முழுக்க பேங்கில் நடக்கும் குளறுபடிகளை வெட்ட வெளிச்சமாக வெளிக்காட்டியது. படம் வெளிவந்து மக்கள் மற்றும் ரசிகர் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் இந்த திரைப்படம் 350 கோடி வசூலித்து உள்ளது இந்த மூன்று படங்களின் வசூலை சேர்த்து வைத்து பார்த்தால் மொத்தம் 815 கோடி என சொல்லப்படுகிறது.