ஆஹா கல்யாணம் சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகைகள் ஒரு எபிசோடுக்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

Aaha Kalyanam
Aaha Kalyanam

Aaha Kalyanam : விஜய் டிவியில் ஆஹா கல்யாணம் என்ற சீரியல் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் ஆரம்பமாகி சில மாதங்களிலே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.. அதோடு மட்டுமல்லாமல் வாரம் வாரம் சீரியலுக்கு கொடுக்கப்படும் டிஆர்பி ரேட்டிங்கிலும் டாப் லிஸ்டில் இருக்கின்றன.

இதில் முக்கிய ஹீரோ ஹீரோயின்னாக நடித்து வரும் சூர்யா மற்றும் மகா கதாபாத்திரத்திற்கு எண்ணற்ற ரசிகர்களும் இருக்கின்றனர்.. தற்பொழுது ஆஹா கல்யாணம் சீரியலில் மிகவும் விறுவிறுப்பான சம்பவம் நடைபெற்று வருகிறது.. கௌதம் ஐஸ்வர்யா கல்யாணம் நடைபெற இருக்கின்றன.

ஆனால் இந்த கல்யாணத்தில் கௌதமிற்கு விருப்பம் இல்லாததால் ஐஸ்வர்யாவை கடத்த சொல்லி கைலாஷ் என்பவரிடம் பணம் கொடுத்துள்ளார்.. அந்த கைலாசம் ஐஸ்வர்யாவை கடத்தி தானே திருமணம் செய்து கொள்ளவும் ஆசைப்பட்டு ஐஸ்வர்யாவை கடத்தியுள்ளார்.

கல்யாண நேரத்தில் அய்யர் மணப்பெண்ணை அழைத்து வாங்கள் என்று சொல்ல கோடீஸ்வரியும் மகாவும் ஐஸ்வர்யா ரூமுக்கு போய் பார்க்கின்றனர் அங்கு ஐஸ்வர்யா இல்லை, இதுதான் நேரம் என்று கௌதம் உடைய அம்மா சித்ரா தேவியும் ஐஸ்வர்யா குடும்பத்தை திட்டுகிறார் பிறகு மகாவும் சூர்யாவும் ஐஸ்வர்யாவை தேடி செல்கின்றனர்.

இந்த நிலையில் ஆஹா கல்யாணம் சீரியலில் நடித்து வரும் நடிகர் நடிகைகள் வாங்கும் சம்பள விவரம் வெளியாகி இருக்கிறது.. ராஜேஸ்வரி ரூ 8000 to 10000, கோடீஸ்வரி ரூ 20000 to 25000, பிரபா ரூ 8000 to 12000, விஜய் ரூ 6000 to 8000, ஐஸ்வர்யா ரூ 10000 to 15000, கௌதம் 10,000 to 12000, மகா ரூ 18000 to 22000, சூர்யா 18000 to 22000 என சொல்லப்படுகிறது..