நடிகர் சூர்யா சமீபகாலமாக சமூக அக்கறை உள்ள திரைப்படங்களை கொடுத்து வெற்றி கண்டு வருகிறார். அந்த வகையில் சூரறை போற்று, ஜெய் பீம், எதற்கு துணிந்தவன் போன்ற படங்களை கொடுத்து ஓடிக்கொண்டிருக்கிறார் தற்பொழுது கூட நடிகர் சூர்யா அடுத்தடுத்த சிறந்த இயக்குனர்களுடன் கைகோர்த்து புதிய படங்களில் நடித்து வருகிறார்.
முதலாவதாக இயக்குனர் பாலாவுடன் இணைந்து வணங்கான் என்ற திரைபடத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முழுக்க முழுக்க மீனவர்கள் சம்பந்தப்பட்ட ஒரு படமாக உருவாகி வருகிறது இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக 18 வயது நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். படத்தின் ஷூட்டிங் கன்னியாகுமரி தூத்துக்குடி அதை சுற்றி இருக்கும் பகுதிகளில் படமாக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.
முதல் கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பை நோக்கி பட குழு நகர்ந்து உள்ளது இது இப்படி இருக்க அடுத்ததாக நடிகர் சூர்யா, சிறுத்தை சிவா உடன் ஒரு படம் பண்ணுகிறார் மேலும் தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறனுடன் இணைந்து வாடிவாசல் படத்திலும் நடிக்க உள்ளார்.
முதலில் வாடிவாசல் படத்தில் தான் நடிக்க சூர்யா அதிகம் ஆர்வம் காட்டினார் ஆனால் வெற்றிமாறன் விடுதலை படத்திற்காக தீவிரம் காட்டியதால் வாடிவாசல் படத்தை ஒதுக்கி வைத்துள்ளனர் இருப்பினும் இந்த படம் எடுக்கப்படுவது உறுதி என கூறப்படுகிறது.
சூர்யா வாடிவாசல் திரைப்படத்திற்காக தனது சம்பளத்தை உயர்த்தி உள்ளார் எனவும் கூறப்படுகிறது. வாடி வாசல் திரைப்படத்திற்காக நடிகர் சூர்யா சம்பளமாக சுமார் 28 கோடி வாங்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை ஆனால் இணையதள பக்கத்தில் வைரல் ஆகி வருகிறது.