அட்லீயின் உதவி இயக்குனராக பணியாற்றி பின் சினிமாவில் இயக்குனர் அவதாரம் எடுத்து உள்ளவர் சிபிச்சக்கரவர்த்தி முதல் படத்திலேயே முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயனை ஹீரோவாக வைத்து டான் என்னும் படத்தை எடுத்தார்.
இந்த படம் கடந்த மே 13ஆம் தேதி படம் உலக அளவில் ரிலீஸ் ஆனது. இந்த படம் முழுக்க முழுக்க காமெடி, சென்டிமென்ட், ஆக்ஷன் என அனைத்தும் சிறப்பாக இருந்த காரணத்தினால் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த திரைப்படம் முதல் நாளில் இருந்துதொடர்ந்து நல்ல வசூல் வேட்டை நடத்தி வருவதால் நிச்சயம்.
டாக்டர் திரைப்படத்தைப் போலவே இந்த படமும் 100 கோடி கிளப்பில் இணையும் என பலரும் கூறி வருகின்றனர்.டான் திரைப்படத்தை மக்கள் தொடர்ந்து பார்த்து வருகின்றனர் காரணம் படத்தில் சில அழுத்தமான சென்டிமென்ட் சீன்கள் இருக்கிறது அது கடைசியில் நம்மை அழ வைத்து விடுகிறது இது அந்த படத்திற்கு ப்ளஸ்ஸாக அமைகிறது.
இதனால் நீண்ட நாட்கள் டான் படம் ஓடும் என பார்க்கப்படுகிறது. முதல் வாரத்தில் டான் திரைப்படம் உலக அளவில் 33 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் நேற்றும் நல்ல வசூலை அள்ளி உள்ளது டான்.
நான்காவது நாள் முடிவில் தமிழகத்தில் மட்டுமே சுமார் 35 கோடியை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது 40 கோடி பட்ஜெட்டில் உருவான டான் திரைப்படம் முதல் வாரத்திலேயே போட்ட காசை எடுத்து உள்ளதால் வருகின்ற நாட்களில் லாபத்தை பார்க்கும் என கூறப்படுகின்றது. இதனால் டான் படக்குழு தற்போது செம்ம சந்தோஷத்தில் இருக்கிறது.