சிவகார்த்திகேயனின் “டான்” திரைப்படம் உலகம் முழுவதும் அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.? வெளிவந்த ரிப்போர்ட்.

ton-
ton-

நடிகர் சிவகார்த்திகேயன் மகள் மற்றும் ரசிகர்களை கவர்ந்து இழுக்கக் கூடிய காமெடி கலந்த படங்களை கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார் அந்த வகையில் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான டாக்டர் திரைப்படம் அப்படித்தான் இருந்தது அதனை தொடர்ந்து இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டான்.

தமிழ் சினிமா உலகில் அண்மைகாலமாக டாப் நடிகர்கள் படங்கள் வெளிவந்து கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது அந்த வகையில் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், அஜித்தின் வலிமை, விஜய்யின் பீஸ்ட் ஆகிய படங்கள் இடம்பிடித்தன இந்த நிலையில் தான் நடிகர் சிவகார்த்திகேயனின் டான் திரைப்படமும் இப்பொழுது வெளியாகியுள்ளது.

டான் திரைப்படம் முழுக்க முழுக்க காமெடி, சென்ட்டிமென்ட் என கலந்து இருந்தால் ரசிகர்களையும் தாண்டி பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் ஓரளவு நல்ல வசூலை டான் திரைப்படமாக அள்ளும் என கூறப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில்  டான் திரைப்படம் முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்தது என்பது குறித்த தகவலும் கிடைத்துள்ளது.

அதன்படி டான் படம் தமிழகத்தில் மட்டும் முதல் நாளில் சுமார் 9 கோடியை வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன உலக அளவில் நடிகர் சிவகார்த்திகேயனின் டான் படத்தின் வசூல் நிலவரமும் தற்போது நமக்கு கிடைத்துள்ளது அதன்படி பார்க்கையில் முதல் நாளில் மட்டும் சுமார் 15 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

டான் திரைப்படத்தை தொடர்ந்து பெரிய நடிகர்கள் படங்கள் எதுவும் தெரியாமல் இருப்பதால் நிச்சயம் இந்த திரைப்படம் வருகின்ற நாட்களில் மிகப்பெரிய நாட்களில் மிகப்பெரிய ஒரு வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. டான் படம் சிவகார்த்திகேயன் கேரியரில் நிச்சயம்  ஒரு சிறந்த படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.