படையப்பா திரைப்படத்தில் நடித்ததற்காக சிவாஜி கணேசன் வாங்கிய முழு சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

rajini sivaji
rajini sivaji

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் ஹீரோவாக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவர் இதுவரை நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றி படங்கள் தான் அந்த வரிசையில் இன்னொரு வெற்றி படத்தை கொடுக்க நெல்சன் உடன் கைகோர்த்து தனது 169 வது திரைப்படமான ஜெயிலர் படத்தில் விறுவிறுப்பாக ரஜினி நடித்து வருகிறார்.

இந்த படம் முழுக்க முழுக்க ஒரு ஜெயில் சம்பந்தப்பட்ட படமாக உருவாகி வருவதால் ஆக்ஷன், சென்டிமென்ட் போன்ற சீன்கள் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது ரஜினியுடன் கைகோர்த்து ரம்யா கிருஷ்ணன், விநாயகரன், சிவராஜ் குமார், வசந்த் ரவி மற்றும் பலர் நடித்து வருகின்றனர் இது ஒரு பக்கம்..

இருக்க மறுபக்கம் ரஜினி பற்றிய செய்திகள் ஒவ்வொன்றாக வெளி வருவது வழக்கம் அந்த வகையில் தற்போது ரஜினி படம் குறித்து ஒரு தகவல் வெளியாகி உள்ளது. 1999 ஆம் ஆண்டு கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் படையப்பா.

இந்த படம் முழுக்க முழுக்க ஆக்சன், குடும்பம் சென்டிமென்ட் , காமெடி என அனைத்தும் கலந்த ஒரு கலவையான படமாக இருந்தது இந்த படத்தில் ரஜினியுடன் கைகோர்த்து மணிவண்ணன், சிவாஜி, சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், செந்தில் என மிகப் பெரிய ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.

இந்த படத்தில் சிவாஜியும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினர் அந்த  கதாபாத்திரத்தில் நடிக்க அவர் வாங்கிய சம்பளம் குறித்து தான் நாம் பார்க்க இருக்கிறோம் அதன்படி பார்க்கையில் சிவாஜி படையப்பா படத்திற்காக சுமார் 25 லட்சம் தான் சம்பளமாக வாங்கினாராம்..