சினிமா உலகில் இருப்பவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக தனது திறமையை வளர்த்துக் கொண்டு மற்றவற்றிலும் கவனம் செலுத்துவார்கள் அந்த வகையில் நடிகர் சந்தானம் சினிமா உலகில் காமெடியனாக அறிமுகமாகி பல வெற்றி படங்களில் நடித்தார். ஒரு சமயத்தில் அஜித், விஜய், ரஜினி போன்ற நடிகர்களுடன் நடித்து தனது மார்க்கெட்டை மிகப்பெரிய அளவில் உயர்த்திக்கொண்டார்.
மேலும் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு காமெடி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றார். இப்படி ஓடிக்கொண்டிருந்த இவருக்கு ஒரு கட்டத்தில் ஹீரோவாக நடிக்கும் கதைகள் ஏராளமாக குவிய நடித்து பார்க்கலாம் என தான் நடித்தார். அப்படி இவர் நடித்த முதல் படமே வெற்றி படமாக அமைந்ததால் அடுத்தடுத்த படங்களை தேர்ந்தெடுத்தார்.
தொடர்ந்து ஹீரோவாக பல வெற்றி படங்களை கொடுத்து ஓடி கொண்டிருந்த சந்தானம் இப்பொழுது வித்தியாசமான கதைகைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் இரத்தின குமார் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் வெளியாகி வெற்றி நடை கண்டு வரும் திரைப்படம் குலு குலு. ..
இந்த திரைப்படத்தில் சந்தானத்துடன் கைகோர்த்து அதுல்யா சந்திரா, பிரதீப் ராம், சார்ஜ் மரியன், பாக்ஸர் தீனா, ஹரிஷ் குமார், லொள்ளுசபா மாறன், கவி சுந்தரம், டி எஸ் ஆர் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் இந்த படத்தில் நடித்திருந்தனர் இந்த படம் முழுக்க முழுக்க காமெடி மற்றும் செண்டிமெண்ட் கலந்த திரைப்படமாக இருந்ததால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
ஆரம்பத்தில் இருந்தே நல்ல வசூல் வேட்டை கண்டு வந்த குலு குலு திரைப்படம் சென்னையில் மட்டும் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது. அதன்படி பார்க்கையில் இதுவரை 89 லட்சம் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவிலேயே ஒரு கோடியை தொட்டு ஒரு புதிய சாதனையை படைக்க இருக்கிறது சந்தானத்தின் குலு குலு.