திறமை இருப்பவர்கள் சினிமா உலகை எப்போது வேண்டுமானாலும் ஆட்சி செய்ய முடியும் அதற்கு ஏற்றார் போல தனது திறமையை சரியாக பயன்படுத்த வேண்டும். அந்த வகையில் தமிழ் சினிமாவில் நடிகராக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் பின் சினிமாவில் சமுதிரக்கனி நாடோடிகள் என்னும் படத்தை இயக்கி தன்னை மிகப்பெரிய அளவில் பிரபலப்படுத்தி அதன் பின் படங்களில் தனது நடிப்பது இயக்குவதுமாக இருந்தார்.
சுப்பிரமணியபுரத்தில் தனது வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டிய தொடர்ந்து தமிழ் சினிமா உலகில் ஹீரோ, வில்லன், குணசித்திர கதாபாத்திரங்களில் நடிக்க பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது. அந்த வகையில் RRR, மாறன், WRITER, எம்ஜிஆர் மகன் என பல படங்களில் நடித்தார். தற்போது சோலோ மற்றும் முக்கிய ஹீரோக்களின் படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
தமிழைத் தாண்டி தெலுங்கிலும் இவருக்கு நல்ல வாய்ப்புகள் குவிந்து வருவது என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் சமுத்திரகனி கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு அப்பாவாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சமுத்திரகனி அஜித் நடிப்பில் உருவாகி வரும் AK 61 திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் சமுத்திரகனி ஒரு திரைப் படத்தில் நடிப்பதற்காக தற்பொழுது எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி பார்க்கையில் டான் படத்தில் நடித்ததற்காக 1 கோடி சம்பளம் வாங்கி உள்ளார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து முக்கிய மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வரும் சமுத்திரகனி இதுவரை சம்பளத்தை ஏற்றாமல் நடிப்பதால் தான் அவருக்கு வாய்ப்புகள் ஒரு பக்கம் குவிக்கிறது.