வித்யாசமான திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து மக்களை கவர்ந்து இழுப்பவர் நடிகர் சூர்யா ஆனால் அண்மைகாலமாக சமூக அக்கரை உள்ள திரைப் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து அசத்தி வருகிறார் இவர் கடைசியாக ஜெய்பீம், சூரரைப்போற்று, எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்கள் சமூக அக்கறை உள்ள கருத்துக்களை எடுத்துரைக்கும் திரைப்படங்களாக அமைந்தன.
இதுவும் அந்த படங்களும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பட்டையை கிளப்பியது. அதனை தொடர்ந்து இப்பொழுது இயக்குனர் பாலாவுடன் இணைந்து மீனவர் சம்பந்தப்பட்ட ஒரு படத்தில் நடித்து வருகிறார் முதல்கட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக முடிந்த நிலைகளில் இரண்டாவது கட்ட ஷூட்டிங் ஆரம்பிக்க உள்ளது.
இந்த படத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு நடிகர் சூர்யா தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறனுடன் முதல் முறையாக இணைந்து வாடிவாசல் திரைப் படத்தில் நடிப்பதற்கான வேலைகளில் இறங்குவார் என தெரியவருகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் அண்மையில் உலக நாயகன் கமலஹாசன் நடிப்பில் உருவான விக்ரம் திரைப்படத்தில் நரேன் போன்றவர்கள் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அசத்தினார்.
இவர்களை தொடர்ந்து இந்த படத்தில் கடைசி காட்சியில் நடிகர் சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடிப்பு அசத்தியிருந்தார் இந்த திரைப்படத்தின் அடுத்த பாகத்தில் கமலும் சூர்யாவும் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பார் என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார.
இப்படி இருக்கின்ற நிலையில் விக்ரம் 2 பக்கத்தில் சூர்யா நடிப்பதற்காக எவ்வளவு சம்பளம் வாங்க உள்ளார் என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த படத்திற்காக சூர்யா நடிக்க சுமார் 40 கோடியை சம்பளமாக பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.