வாரிசு படத்தில் காமெடியன்னாக நடிக்க “யோகிபாபு” வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

yogi babu
yogi babu

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து ஓடி கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த வாரிசு திரைப்படம் வசூலில் அதிரிபுதரி ஹிட் அடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. வம்சி இயக்கத்தில் தில்ராஜ் தயாரிப்பில் உருவான வாரிசு திரைப்படத்தில் விஜய் ஒரு மிகப்பெரிய தொழிலதிபராக நடித்திருந்தார்.

அவருடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, ஜெயசுதா, பிரகாஷ் ராஜ், சரத்துகுமார், ஷாம், ஸ்ரீகாந்த், யோகி பாபு என பலர் நடித்திருந்தனர் படம் முழுக்க முழுக்க குடும்ப செண்டிமெண்ட்  படமாக இருந்தது. வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் குடும்பங்கள் கூட்டம் கூட்டமாக வாரிசு படத்தை பார்த்தனர்.

இதனால் வாரிசு படத்தின் வசூல் அடுத்த அடுத்த நாட்களில் அதிகரித்தது இதுவரை மட்டுமே வாரிசு படத்தின் வசூல் 300 கோடிக்கு மேல் அள்ளி உள்ளது அண்மையில் கூட தளபதி விஜய், இயக்குனர் வம்சி, தில் ராஜு  என பட குழுவினர் அனைவரும் வாரிசு படத்தின் வெற்றியை கேக்கு வெட்டி கொண்டாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து தளபதி விஜய் லியோ திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்தப் படம் மிகப்பெரிய ஒரு ஆக்சன் திரைப்படமாக உருவாகி வருகிறது இரண்டாம் கட்ட சூட்டிங் ஜம்மு-காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்படி இருக்கின்ற நிலையில் காமெடி நடிகர் யோகி பாபு வாரிசு திரைப்படத்தில் நடிக்க எவ்வளவு சம்பளம் வாங்கியுள்ளார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது அதன்படி பார்க்கையில் நடிகர் யோகி பாபு வாரிசு திரைப்படத்திற்காக சுமார் 30 லட்சம் வாங்கிய நடித்தாக சொல்லப்படுகிறது. இந்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படும் வைரலாகி வருகிறது.