பத்து தல திரைப்படத்தில் கிளாமர் ஆட்டம் போட “சாயிஷா” வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.? குஷியில் ஆர்யா

pathu-thala
pathu-thala

தமிழ் சினிமாவில் பன்முகத்தன்மை கொண்டவராக இருந்து வருபவர் நடிகர் சிம்பு. இவர் நடிப்பில் உருவாகி திரைப்படம் பத்து தல. இந்த படம் வருகின்ற மார்ச் 30ஆம் தேதி திரையரங்கில் ரிலீஸ் ஆக இருக்கின்றன. அதனால் படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் சோராக நடைபெற்று வருகின்றன.

அண்மையில் கூட சென்னையில் நேரு உள் விளையாட்டு அரங்கில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை கிருஷ்ணா இயக்கியுள்ளார். இந்த படத்தின் கதை மிகச் சிறப்பாக வந்துள்ளதாக சினிமா பிரபலங்கள் சிலர் கூறி வருகின்றனர்.  அதனால் சிம்பு ரசிகர்கள் பத்து தல படத்தை திரையரங்கில் காண பெரிய எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.

பத்து தல படத்தில் சிம்புவுடன் இணைந்த முக்கிய கதாபாத்திரத்தில் கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கௌதம் வாசுதேவ் மேனன் போன்றோர் நடித்துள்ளனர். ஏ ஆர் ரகுமான் இசையமைத்த இந்த படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் சிறப்பாக வந்துள்ளது. புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஓ சொல்றியா மாமா என்ற பாடலுக்கு சமந்தா நடனமாடிருந்தார். அந்தப் பாடல் மற்றும் சமந்தாவின் நடனம் மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது.

அதுபோல பத்து தல படத்திலும் ஒரு ஐட்டம் டான்ஸ் இடம் பெற்றிருக்கிறது. அந்தப் பாடலுக்கு ஆர்யாவின் மனைவி சாயிஷா தான் செம்ம குத்தாட்டம் போட்டு இருக்கிறார். ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த வனமகன் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தசாயிஷா ஒரு சில திரைப்படங்களில் நடித்து பின் ஆர்யாவை திருமணம் செய்து கொண்டு சிறப்பாக வாழ்ந்து வருகிறார்.

இருவருக்கும் ஒரு அழகான பெண் குழந்தை இருக்கிறது. இப்படி இருக்க நீண்ட இடைவெளிக்கு பின்பு ஒரு ரீ என்ட்ரி  கொடுத்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் பத்து தல படத்தில் கௌதம் கார்த்தி உடன் இணைந்து குத்தாட்டம் போட்டுள்ளார். இந்த பாடலுக்கு ஆட சாயிஷா  எவ்வளவு சம்பளம் வாங்கி இருக்கிறார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி இந்த பாடலுக்கு ஆட 40 லட்சம் தான் சம்பளமாக வாங்கி இருக்கிறார்.

இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் முன்னணி நடிகைகளை வைத்து இந்த பாடலை எடுத்தால் பல கோடி செலவாகும் என கருத்தில் கொண்டு சாயிஷாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். அதற்கு ஆர்யாவும் தனது மனைவி ஒரு படத்தில் ஹீரோயின்னாக நடிக்க 30 முதல் 40 லட்சம் தான் சம்பளமாக வாங்குகிறார். அதனால் இந்த ஒரு பாடலுக்கு இவ்வளவு தொகை என்பது பெரிய விஷயம் என நினைத்து ஆர்யாவும் இந்த பாடலுக்கு நடனமாட சாய்ஷாவை அனுப்பி வைத்துள்ளார்.