வசூல் வேட்டையாடும் போர் தொழில் படத்திற்காக “சரத்குமார்” வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

por thozhil
por thozhil

தமிழ் சினிமா உலகில் பிரம்மாண்ட பட்ஜெட் படங்கள் ஒரு பக்கம் வசூலை அள்ளுகிறது என்றால் மறுபக்கம் சிறிய பட்ஜெட் படங்களும் மக்கள் மற்றும் ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்கின்றன அந்த வகையில் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் சரத்குமார், அசோக் செல்வன் நடிப்பில் உருவான திரைப்படம்  போர் தொழில்..

அண்மையில் திரையரங்குகளில் வெளியானது இந்த படம் முழுக்க முழுக்க படித்த ஒரு போலீஸ்காரனுக்கும் அனுபவசாலிக்கும் இடையே இருக்கும் வேறுபாட்டை தெள்ளத் தெளிவாக காட்டி இருந்தது. படத்தில் ஒவ்வொரு சீனும் கைதட்டல் மற்றும் ரசிக்கும்படி இருந்ததால் திரையரங்குகளில் கூட்டம் குவிந்தது.

அதன் காரணமாக இந்த படத்தின் வசூல் அதிகரித்த நிலையில் தற்போது திரையரங்குகளில் முன்வந்து பல ஸ்கிரீன்கள் ஒதுக்கி இந்த படத்திற்கு முன்னுரிமை கொடுத்துள்ளது. இதனால் வருகின்ற நாட்களிலும் போர் தொழில் திரைப்படம் மிகப்பெரிய ஒரு வசூலை அள்ளும் என பலரும்..

சொல்லி வந்த நிலையில் இதுவரை மட்டுமே போர் தொழில் திரைப்படம் சுமார் 28 கோடி வசூலித்து இருக்கிறதாம். இந்த படத்தில்  சரத்குமார் அசோக்செல்வனுடன் இணைந்து நிழல்கள் ரவி, O. A. K சுந்தர், சரத் பாபு, நிகிலா விமல் மற்றும் பலர் நடித்திருந்தனர். போர் தொழில் படத்தில் நடித்த ஒவ்வொருவரும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்திருந்தனர்.

குறிப்பாக சரத்குமார் நடிப்பு பெரிய அளவில் கைதட்டல் வாங்கியது போர்த் தொழில் படத்திற்காக சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் வாங்கிய சம்பளம் குறித்துதான் தற்பொழுது பார்க்க இருக்கிறோம். அதன்படி அவருடைய சம்பளம் சுமார் 1 கோடி என சொல்லப்படுகிறது இந்த தகவல் தற்போது சோசியல் மீடியா பக்கத்தில் வைரல் ஆகி வருகிறது.