“மாவீரன்” படத்திற்காக அதிதி ஷங்கர் வாங்கப்போகும் சம்பளம் எவ்வளவு தெரியுமா.? உச்சகட்ட கோபத்தில் மற்ற நடிகைகள்.!

aditi-shamkar-

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி இவர் முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள விருமன் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படம் வருகின்ற 12ஆம் தேதி திரையரங்குகளில் கோலாகலமாக ரிலீஸ் ஆக இருக்கிறது. அதற்கு முன்பாக மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்திழுக்க பட குழு இசை வெளியீட்டு விழாவை மதுரையில் அண்மையில் நடத்தியது.

படத்தின் பிரமோஷனை பெரிய பெரிய இடங்களில் நடத்தி வருகிறது. இதனால் இந்த படம் பெரிய அளவில் ரீச் ஆகும் என சொல்லப்படுகிறது. இப்படி இருக்க இந்த படத்தில் ஹீரோயினாக முதல் முதலில்  அறிமுகமாகியுள்ளார் அதிதி ஷங்கர். கார்த்தி மற்றும் அதிதிசங்கர் உடன் கைகோர்த்து இந்த படத்தில் பலர் நடித்துள்ளனர்.

இந்த படம் முழுக்க முழுக்க சென்டிமென்ட், ஆக்சன், காதல், ரொமான்டிக் என அனைத்தும் இருப்பதால் இந்த படம் நிச்சயம் அனைவரையும் கவர்ந்திழுக்கும் என தெரிய வருகிறது. அதில் முதல் படத்திலேயே அதிதி சூப்பராக நடித்திருக்கிறார் என படத்தில் பணியாற்றியவர்கள் தொடங்கி நடிகர் நடிகைகள் அனைவரும் கூறி வருகின்றனர்.

இது இப்படி இருக்க முதல் படமே இன்னும் வெளி வரவில்லை அதற்குள் அடுத்தடுத்த வாய்ப்புகள் குவிகின்றது. அந்த வகையில் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் திரைப்படத்தில் அதிதி சங்கர் ஹீரோயினாக நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது முதல் படம் ரிலீஸ் ஆகல அதுக்குள்ளலேயே இன்னொரு டாப் ஹீரோ படம் என்பது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.

மேலும் அதிதி ஷங்கர் சிவகார்த்திகேயனுடன் கைகோர்த்து மாவீரன் படத்தில் நடிக்க இருக்கிறார். அதற்காக அவர் சுமார் 25 லட்சம் சம்பளம் வாங்க உள்ளதாக கூறப்படுகிறது. எடுத்த உடனே 25 லட்சம் சம்பளம் வாங்குவது மற்ற இளம் நடிகைகளுக்கு ஆச்சரியத்தை  கொடுத்துள்ளதாம்.