Jailer : தமிழ் சினிமாவில் 40 வருடங்களுக்கு மேலாக நடித்து ஓடிக் கொண்டிருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான தர்பார், அண்ணாத்த போன்ற படங்கள் சுமாராக ஓடின இதிலிருந்து மீண்டு வர இளம் இயக்குனர் நெல்சனுடன் கூட்டணி அமைத்து சூப்பர் ஸ்டார் “ஜெயிலர்” படத்தில் நடித்தார்.
அவருடன் இணைந்து மோகன்லால், சிவராஜ்குமார், விநாயகன், யோகி பாபு, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, சுனில், கிஷோர், ரெடின் கிங்ஸ்லி மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்தனர். படம் ஒரு வழியாக ஆகஸ்ட் 10ஆம் தேதி 4000 -த்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது.
ஜெயிலர் படம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருந்தது நடிகர் ரஜினியின் மாறுப்பட்ட நடிப்பு ரசிகர்களையும் தாண்டி குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் கைத்தட்டல் வாங்கியது மேலும் படத்தில் காமெடி, ஆக்ஷன், சென்டிமென்ட் மற்றும் வில்லன் ரோல் போன்றவை பெரிதும் பேசப்பட்டன.
இதனால் ஜெயிலர் படத்தை பற்றி தான் பட்டி தொட்டி எங்கும் பேசப்பட்டது அதன் காரணமாக வசூலிலும் ஜெயிலர் ருத்ரதாண்டவம் ஆடியது முதல் நாளில் மட்டுமே 90 கோடிக்கு மேல் வசூல் செய்தது அடுத்த அடுத்த நாட்களிலும் வசூல் குறையவே இல்லை நேற்று வரை 395 கோடி வசூல் செய்திருந்த நிலையில் தற்போதைய நிலவரப்படி ஜெயிலர் திரைப்படம் உலகம் முழுவதும்..
சுமார் 413 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது வெகு விரைவிலேயே படம் 500 கோடியை தொடும் என சினிமா விமர்சகர் பலரும் கூறி வருகின்றனர் இதனால் ஜெயிலர் படக்குழு சரி, சூப்பர்ஸ்டார் ரஜினியும் சரி செம்ம சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர்.