பாரதிராஜா இயக்கத்தில் உருவான “16 வயதினிலே” படத்தில் நடித்தற்காக ரஜினி, கமல் வாங்கிய முழு சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

kamal-
kamal-

சினிமா உலகில் இருக்கும் ஒவ்வொரு நடிகர் நடிகைகளும் சரி, இயக்குனர்களும் சரி, நம்பர் ஒன் இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக அயராது பாடுபடுவார்கள் அந்த வகையில் இயக்குனர் பாரதிராஜா ஆரம்பத்தில் இருந்து இப்போது வரையும் பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்தும், இயக்கியும் பிரபலமடைந்தவர். இவர் அண்மை காலமாக படங்களை இயக்கவில்லை என்றாலும் இவர் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் பாரதிராஜா படம் குறித்து ஒரு தகவல் கிடைத்துள்ளது.  இவர் 1977 ஆம் ஆண்டு உருவாக்கிய திரைப்படம் தான் 16 வயதினிலே இந்த படத்தில் ரஜினி, கமல், ஸ்ரீதேவி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து அசத்தினர் இந்த படத்தில சப்பானி கதாபாத்திரத்தில் கமலின் மாறுபட்ட நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது அதேசமயம் வில்லனாக ரஜினி மிரட்டி இருந்தார்.

காமெடியனாக கவுண்டமணி சும்மா பின்னி பெடல் எடுத்திருந்தார் இந்த படம் அப்பொழுது வெளியாகி அதிக நாட்கள் ஓடியதோடு பிரம்மாண்டமான ஒரு வெற்றியை ருசித்தது இந்த படத்திற்கு பிறகு இந்த படத்தில அனைத்து நடிகர், நடிகைகளுக்கும் நல்ல வாய்ப்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகர், நடிகைகள் எவ்வளவு சம்பளம் வாங்கினார்கள் என்பது குறித்து தற்பொழுது தகவல் கிடைத்துள்ளது அது குறித்து விலாவாரியாக நாம் பார்ப்போம். 16 வயதினிலே படத்தில்  சப்பானி கதாபாத்திரத்தில் பின்னி பெடல் எடுத்தற்காக நடிகர் கமலஹாசன் வாங்கிய சம்பளம் சுமார்   27 ஆயிரம் ரூபாய்.

வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டியதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினி அப்பொழுது 5000 ரூபாய் கேட்டிருந்தார் ஆனால் தயாரிப்பாளர் ஒரு வழியாக பேசி 3000 கடைசியாக 2500 ரூபாய் தான் கொடுதாராம். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பின் போது கமலுக்கும், ஸ்ரீதேவிக்கு மட்டும் தான் இளநீர் எல்லாம் கொடுப்பார்களாம் அப்பொழுது ரஜினிக்கு அது கூட கிடைக்காது என கூறப்படுகிறது.