“ருத்ரன்” படத்தில் நடிக்க ராகவா லாரன்ஸ், ப்ரியா பவானி சங்கர் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.? வெளிய வந்த தகவல்

ruthran
ruthran

ராகவா லாரன்ஸ் முதலில் நடன கலைஞராக திரையுலகில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் அதன் பிறகு இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என தன்னை வளர்த்துக் கொண்டு தமிழ் சினிமாவில் பன்முகத்தன்மை கொண்டவராக விளங்குகிறார். இதனால் அவருடைய மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது.

இவர் கடைசியாக நடித்த காஞ்சனா 3 படம் கலவையான விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியாக வெற்றி கண்டது அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து படம் பண்ணுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நான்கு வருடங்களாக நடிக்காமல்  இருந்து வந்த  ராகவா லாரன்ஸ் – க்கு 2023 ஆம் ஆண்டு நல்ல ஆண்டாக அமைந்துள்ளது கைவசம்..

ருத்திரன், அதிகாரம், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், சந்திரமுகி 2  என பல படங்கள் நடித்து வருகிறார். இதில் முதலாவதாக ருத்ரன் திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது ஏற்கனவே படத்தின் டிரைலர் வெளிவந்து வெற்றி பெற்ற நிலையில் படத்திற்கான எதிர்பார்ப்பும் உச்சத்தில் இருக்கிறது.

படத்தில்  ராகவா லாரன்ஸ் உடன் கைகோர்த்து பிரியா பவானி சங்கர், சரத்குமார், சியாம் பிரசாத், பூர்ணிமா பாக்யராஜ், காளி வெங்கட், நாசர், காமராஜ் மற்றும் பல முன்னணி பிரபலங்கள் சூப்பராக நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் தமிழை தாண்டி தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என பல மொழிகளில் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி இருக்கின்ற நிலையில் ருத்ரன் படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் எவ்வளவு சம்பளம் வாங்கி உள்ளார்கள் என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது அதன்படி ராகவா லாரன்ஸ் 15 கோடி சம்பளமாக பெற்றுள்ளாராம்.. ப்ரியா பவானி சங்கர் 2 கோடி, சரத்குமார் 1 கோடி, பூர்ணிமா 35 லட்சம், நாசர் 50 லட்சம் பெற்று இருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன.