தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் அண்மைக்காலமாக வெளிவரும் திரைப்படங்கள் அனைத்தும் வெற்றி படங்களாக மாறி உள்ளன இதனால் சூர்யாவின் மார்கெட் அசுர வளர்ச்சியை எட்டி உள்ளது. தற்பொழுது கூட நடிகர் சூர்யா பாலாவுடன் கைகோர்த்து வணங்கான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
முதல் கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு போய்க்கொண்டிருக்கிறது படத்தின் ஷூட்டிங் கன்னியாகுமரி தூத்துக்குடி அதை சுற்றி இருக்கும் பகுதிகளில் படம் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக 18 வயது இளம் நடிகை கீர்த்திஷெட்டி நடிக்கிறார்.
இந்த படத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு அடுத்ததாக சிறுத்தை சிவா உடன் ஒரு படம், வெற்றிமாறனுடன் கைகோர்த்து வாடிவாசல் திரைப்படத்திலும் இவர் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது இப்படி இருக்கின்ற நிலையில் நேற்று 68 வது தேசிய விருது விழா அறிவிக்கப்பட்டது. அதில் தமிழில் சிறந்த நடிகர் என்ற அந்தஸ்தை சூர்யாவுக்கு வழங்கியது.
மேலும் சூர்யா நடித்த சூரரைப் போற்று திரைப்படம் நிறைய விருதுகளை தட்டி சென்றதால் சூர்யா மற்றும் சூரரை போற்று படக்குழுவும் தற்போது செம்ம சந்தோஷத்தில் இருக்கிறது. இப்படி இருக்கின்ற நிலையில் நாம் அண்மை காலமாக சினிமா பிரபலங்கள் குவித்து வைத்திருக்கும் முழு சொத்து மதிப்பு குறித்து பார்த்து வருகிறோம்.
அதுபோல தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் சூர்யா எவ்வளவு சொத்து சேர்த்து வைத்துள்ளார் என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது அதன்படி பார்க்கையில் நடிகர் சூர்யாவின் சொத்து மதிப்பு சுமார் 250 கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்றாலும் சினிமா வட்டாரங்கள் மத்தியில் பெரிய அளவு பேசப்படுகிறது.