நடிகர் சந்தானம் குவித்து வைத்திருக்கும் “சொத்து மதிப்பு” எவ்வளவு தெரியுமா.? ஆச்சரியத்தில் ரசிகர்கள்.!

santhanam-
santhanam-

நடிகர் சந்தானம் சினிமா உலகில் காமெடியனாக கால் தடம் பதித்து தனது திறமை முழுவதையும் வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார் ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் அஜித், விஜய், சூர்யா, ஆர்யா போன்ற நடிகரின் படங்களில் நடித்து தன்னை மிகப்பெரிய அளவில் சினிமா உலகில் உயர்த்தி கொண்டார்.

மேலும் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்து ஓடிக்கொண்டிருந்தார்.  சினிமா உலகில் வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருந்த இவருக்கு திடீரென சினிமாவில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதை சரியாக தக்க வைத்துக்கொள்ள பெரும்பாலும் சந்தானம் காமெடி கலந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அந்த வகையில் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். அதன் பின் இவர் நடித்த படங்கள் அனைத்தும் வெற்றி படங்கள் தான் மேலும் மக்களுக்கும் பிடித்த படங்களாக மாறின அதன் விளைவாக சந்தானத்தின் படங்கள் பட்ஜெட்டையும் தாண்டி ஓரளவு நல்ல லாபத்தை பார்த்து விடுகின்றன. இதனால் சந்தானத்திற்கு  ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைத்துக் கொண்டே இருக்கின்றன.

இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த குலு குலு திரைப்படம் ரசிகர்களையும் தாண்டி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படமும் தொடர்ந்து நல்ல வசூலை கண்டு வருவதாகவும் ஒரு பக்கம் தகவல்கள் வெளி வருகின்றன. இப்படி இருக்கின்ற நிலையில் அண்மை காலமாக நாம் சினிமா பிரபலங்கள் சேர்த்து வைத்திருக்கும் சொத்து மதிப்பு குறித்து பார்த்து வருகிறோம்.

அதன்படி தற்போது சந்தானத்தின் சொத்து மதிப்பு குறித்து ஒரு தகவல் கிடைத்துள்ளது. அவருடைய சொத்து மதிப்பு சுமார் 5 மில்லியன் டாலரிலிருந்து 6 மில்லியன் டாலர் வரை இருக்கும் என சொல்லப்படுகிறது. இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்றாலும் சினிமா வட்டாரங்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.