திரை உலகில் இருக்கும் ஒவ்வொரு நடிகருக்கும் இருக்கும் ஆசை NO.1 இடத்தை பிடிக்க வேண்டும் என்பதுதான் அதற்காக ஒவ்வொரு நடிகரும் தொடர்ந்து அயராது தனது படங்களில் நடித்து வருகின்றனர் அந்த வகையில் நடிகர் தனுஷ் திரை உலகில் சைலண்டாக இருந்து கொண்டு தனது படங்களின் மூலம் மாஸ் காட்டி வருகிறார்.
இவர் அண்மைக்காலமாக நடிக்கும் படங்கள் ஒவ்வொன்றும் வெற்றி படங்கள் தான். ஏன் கடைசியாக நடித்த திருச்சிற்றம்பலம் படம் கூட நல்ல வசூல் வேட்டை நடத்தியது. அதனைத் தொடர்ந்து செல்வராகவனுடன் ஐந்தாவது முறையாக கூட்டணி அமைத்து தனுஷ் நடித்த திரைப்படம் நானே வருவேன் இந்த படத்தில் ஹீரோ – வில்லன் என இரண்டு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இவருடன் கைகோர்த்து இந்துஜா ரவிச்சந்திரன், யோகி பாபு, பிரபு , செல்வராகவன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் படம் வெளிவந்து கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் முதலில் வசூல் ரீதியாக ஓடியது. ஆனால் இந்த படத்திற்கு பிறகு வந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதன் காரணமாக..
நானே வருவேன் படத்தின் வசூல் அடுத்தடுத்த நாட்களில் குறைய தொடங்கியது. இப்படி இருக்கின்ற நிலையில் நானே வருவேன் திரைப்படம் தயாரிப்பாளருக்கு லாபமா.. நஷ்டமா.. என்பது குறித்து ஒரு தகவல் வெளியாகி உள்ளது நானே வருவேன் திரைப்படம் வெளி வருவதற்கு முன்பாகவே.. Table profit எனக்கு தெரிய வந்துள்ளது. டிஜிட்டல் டைட் மற்றும் சேட்டிலைட் ரைஸ் டப்பிங் உரிமை என முழு படத்தின் பட்ஜெட்டையுமே ரிலீஸுக்கு முன்பே வசூல் செய்து விட்டதாம்..
திரையரங்கில் வெளியான இந்த படம் தயாரிப்பாளருக்கு லாபத்தை மட்டுமே கொடுத்துள்ளதால் கிட்டத்தட்ட 35 கோடி வரை வசூல் செய்துள்ள நிலையில் வசூலின் ஷேர் போக தயாரிப்பாளர் தாணுவுக்கு மட்டுமே 15 கோடி வரை லாபம் கிடைத்திருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்து இன்னும் விவரமாக திருப்பூர் சுப்பிரமணியம் அவர்கள் பேசி உள்ளார்.