தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் சீசனாக ஒளிபரப்பாகி வருகிறது அந்த வகையில் கூடிய விரைவில் பிக் பாஸ் ஆறாவது சீசனும் தொடங்க இருக்கிறது. இந்த பிக்பாஸில் கலந்து கொண்ட சில பிரபலங்கள் சினிமாவில் மிகப்பெரிய உச்சத்தை தொட்டு கொடிகட்டி பறக்கின்றனர். சிலருக்கு இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அதிக வாய்ப்புகள் கிடைக்காமலும் இருக்கின்றன.
தற்போது விஜய் டிவியில் பிபி ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சியை இரண்டு சீசன்களாக நடத்தி வருகின்றன. இதில் பிக்பாஸில் கலந்து கொண்ட பிரபலங்கள் இந்த பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் ஜோடியாக இணைந்து நடனமாடி வருகின்றனர். பிக் பாஸ்க்கு பிறகு வாய்ப்புகள் கிடைக்காத பலரும் இந்த நிகழ்ச்சியை பயன்படுத்திக் கொண்டு இதில் தனது திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது பிக் பாஸ் சீசன் 2 ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பிரியங்கா மற்றும் ராஜு ஜெயமோகன் இருந்து வருகின்றனர். ஜட்ஜ் ஆக ரம்யா கிருஷ்ணன் மற்றும் நடன கலைஞர் சதீஷ் இருவரும் பயணிக்கின்றனர். இதில் பல போட்டியாளர்கள் நடனமாடி வருகின்ற நிலையில் ஒவ்வொரு வார இறுதியிலும் ஒரு ஜோடி வெளியேறுவார்கள்.
இந்த நிலையில் தற்போது பிபி ஜோடிகள் சீசன் 2வில் பைனல் எபிசோடு நடைபெற்றுள்ளது. இதில் கடைசியாக இரண்டு ஜோடிகளை தேர்வு செய்தனர் அதில் அமீர் மற்றும் பாவணி ஜோடி மற்றும் சுஜா மற்றும் சிவகுமார் ஜோடி, இரு ஜோடிகளில் யார் வெற்றிக் கோப்பையை வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது.
கடைசியாக ரம்யா கிருஷ்ணன் மற்றும் சதீஷ் இருவரும் இரு ஜோடிகளுமே டைட்டில் வின்னர் என அறிவித்துள்ளனர். இதனால் அங்கு இருந்த பலரும் இந்த இரண்டு ஜோடிகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். டைட்டில் வின்னர் ஜோடிகளுக்கு பரிசாக 5 லட்சம் வழங்கப்பட்டது.