கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இந்த படத்தில் ஹீரோவாக ஜெயம் ரவி நடித்திருந்தார் படம் காமெடி சென்டிமென்ட் போன்ற அனைத்திலும் சிறப்பாக உள்ளது அதனால் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று ஓடியது. இதைத்தொடர்ந்து இரண்டாவதாக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் லவ் டுடே என்ற படத்தை இயக்கி நடித்தார்.
இந்த படம் அன்றாட வாழ்க்கையில் காதலர்களுக்கு இடையே நடக்கும் எதார்த்தத்தை எடுத்து கூறியதால் படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று ஓடியது. இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் உடன் இணைந்து இவனா, யோகி பாபு, ரவீனா ரவி, சத்யராஜ், ராதிகா சரத்குமார் போன்ற பலரும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் கனகச்சிதமாக நடித்து படத்திற்கு வெற்றியை தேடி தந்துள்ளனர்.
7 கோடி பட்ஜெட்டில் உருவான லவ் டுடே திரைப்படம் 44.8 கோடி வரை லாபத்தை பெற்றுக் கொடுத்துள்ளது. இதனால் இந்த படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனம் அளவில்லா மகிழ்ச்சி அடைந்துள்ளது. லவ் டுடே திரைப்படத்தை ஏஜிஎஸ் கல்பாத்தி தயாரிப்பு நிறுவனம் தயாரித்திருந்தது தமிழகத்தில் லவ் டுடே படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட்டது.
இந்த படம் எதிர்பார்த்ததை விட பெரிய அளவு வெற்றியடைந்ததால் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தென்னிந்திய அளவில் பிரதீப் பிரபலம் அடைந்தார். இந்த படத்த்தில் முதலில் ஹீரோவாக கமிட் ஆகும் போது பிரதீப் 70 லட்சம் சம்பளமாக வாங்கினார். படம் மிகப்பெரிய வெற்றி அடைந்ததன் காரணமாக ஏ ஜி எஸ் கல்பாத்தி நிறுவனம் கூடுதலாக 80 லட்சம் கொடுத்துள்ளது ஆக மொத்தம் லவ் டுடே படத்திற்காக பிரதீப் ரங்க நாதனுக்கு 150 கோடி சம்பளமாக வழங்கப்பட்டது. இந்த தகவல் தற்போது இணையதள பக்கங்களில் பரவி வருகிறது.