முதல் வாரத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வசூலித்தொகை எவ்வளவு தெரியுமா.?

ponniyin selvan
ponniyin selvan

இயக்குனர் மணிரத்தினம் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தழுவி படமாக எடுத்துள்ளார் அதில் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது இதுவரை பொன்னியின் செல்வன் கதையாக படித்த பலரும் படமாக அதிகம் ஆர்வம் காட்டினர். போட்டி போட்டுக் கொண்டு இந்த படத்தை பார்த்தனர்.

அவர்களுக்கே இந்த படம் ரொம்ப பிடித்த போனதால் ரசிகர்களும் சினிமா பிரபலங்களும் போட்டி போட்டுக் கொண்டு படத்தை பார்த்து வருகின்றனர் அதன் காரணத்தினால் இந்த படத்தின் வசூலிலும் அடித்து நொறுக்கி வருகிறது. பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயராம், திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு, பிரகாஷ்ராஜ், சரத்குமார்..

மற்றும் பார்த்திபன், பிரபு, ரகுமான், பாபு ஆண்டனி, கிஷோர் போன்ற பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்தனர். இந்த படம் முதல் நாளில் 80 கோடிக்கு மேல் வசூல் செய்தது அடுத்த அடுத்த நாட்களிலும் இந்த படத்தின் வசூல் அதிகரித்த வண்ணமே இருந்தது இதுவரை மட்டுமே எட்டு நாள் முடிவில் பொன்னியின் செல்வன் திரைப்படம் உலகம் முழுவதும் 360 கோடிக்கு மேல் அள்ளி இருப்பதாக கூறப்படுகிறது.

வருகின்ற நாட்களிலும் இந்த படத்தின் வசூலை தடுக்க எந்த ஒரு படமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது இப்படி இருக்கின்ற நிலையில் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளிவந்து முதல் வாரத்தில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் கிடைத்திருக்கிறது.

அதன்படி பார்க்கையில் தமிழகத்தில் மட்டுமே இதுவரை 130 கோடி வரை வசூலித்திருக்கிறதாம். வெளிநாட்டில் மட்டும் 5 மில்லியன் வரை வசூலித்து இருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன இதனால் படக்குழு மற்றும் படத்தில் நடித்த பலரும் செம்ம சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர்.