பொன்னியின் செல்வன் 2 வெளிநாட்டில் அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.? மிரண்டுப்போன ரசிகர்கள்

ponniyin-selvan

தமிழ் சினிமா உலகில் எத்தனையோ வித்தியாசமான   திரைப்படங்கள் வெளி வருகின்றன ஆனால் எல்லாத்தையும் விட வரலாற்று சம்பந்தப்பட்ட படங்கள் பெரிய வரவேற்பை பெறுகின்றன அந்த வகையில் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை படமாக எடுத்து திரைக்கு கொண்டு வந்தவர் மணிரத்தினம்.

நீளமாக இருந்த காரணத்தினால் இரண்டு பாகங்களாக வெளியிட திட்டமிட்டார் அதன்படி முதல் பாகம் கடந்த ஆண்டு மே 30 ஆம் தேதி வெளியாகி மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று படம் 400 கோடிக்கு மேல் அள்ளி வெற்றி கண்டது அதனை தொடர்ந்து இரண்டாவது பாகத்திற்கான எதிர்பார்ப்பும் உச்சத்தில் இருந்தது.

அதன்படி பொன்னியின் செல்வன் இரண்டாவது பாகமும் உடனடியாக எடுக்கப்பட்டு இந்த ஆண்டு ஏப்ரல் 28 ஆம் தேதி கோலாகலமாக ரிலீஸ் ஆனது இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்து காணப்பட்டாலும் படம் என்னவோ பெரிய அளவு ரசிகர்களையும், மக்களையும் பூர்த்தி செய்யவில்லை.

அதனால் இந்த திரைப்படத்தின் வசூலும் முதல் பாகத்தை விட கம்மி என பலரும் கூறி வருகின்றனர் இந்த நிலையில் பொன்னியின் செல்வன் இரண்டாவது பாகம் வெளிநாடுகளில் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல்கள் கிடைத்துள்ளன அதன்படி வெளிநாட்டில் மட்டும் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் சுமார் 130 கோடி வரை வசூலித்திருக்கிறதாம்.

இது மிகப்பெரிய ஒரு தொகையாக கருதப்பட்டாலும் முதல் பாகத்தை விட 24% கம்மியான சொல்லப்படுகிறது. இதை வைத்து பார்க்கும் போதே தெரிகிறது முதல் பாகத்தை விட இரண்டாவது பாகம் வசூல் ரீதியாக கம்மி என்பது தெரிய வந்துள்ளது இந்த தகவல் தற்போது சோசியல் மீடியா பக்கத்தில் காட்டு தீ போல பரவி வருகிறது.