ஜெயிலர் படத்துக்காக “நெல்சன் திலீப்குமார்” வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.? வேற மாரி வேற மாரி

nelson Dilipkumar
nelson Dilipkumar

Nelson Dilipkumar : தமிழ் சினிமாவில் இன்று கவனிக்கப்படக்கூடிய இயக்குனர்களில் ஒருவர் நெல்சன் திலீப்குமார். இவர் முதலில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா என்னும் படத்தை எடுத்து வெற்றி கண்டார் அதனை தொடர்ந்து இவர் எடுத்த டாக்டர் திரைப்படம் 100 கோடி வசூல் செய்து அசத்தியது.

அதன் பிறகு பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்தார்.  கடைசியாக  விஜயை வைத்து பீஸ்ட் என்னும் படத்தை எடுத்தார் ஆனால் இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்று ஓடியது. இந்த படம் எடுத்துக் கொண்டிருக்கும் பொழுது ரஜினியிடம் ஜெயிலர் படத்தின் கதையை சொல்லி ஓகே வாங்கி இருந்தார்.

பிறகு முழு கதையையும் சொல்லி  படப்பிடிப்பை தொடங்கினார்கள் படத்தின் படப்பிடிப்பு பல முக்கிய இடங்களில் எடுக்கப்பட்டு ஒரு வழியாக முடிந்தது அதன் பிறகு அடுத்தடுத்த அப்டேட்டுகளை வெளியிட்டு ஜெயிலர் படத்திற்கான எதிர்பார்ப்பை  அதிகரித்து உள்ளது படத்தில் ரஜினி உடன் சேர்ந்து தமன்னா, ரம்யா கிருஷ்ணன்..

யோகி பாபு, வசந்த் ரவி, விநாயகன், சிவராஜ்குமார், மோகன்லால் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர் ஜெயிலர் படம் வருகின்ற ஆகஸ்ட் 10ஆம் தேதி அதாவது நாளை கோலாகலமாக வெளியாக இருக்கிறது. இந்த நிலையில்  இயக்குனர் திலீப் குமாரின் சம்பளம் குறித்து தகவல்  வெளியாகியுள்ளது.

ஜெயிலர் படத்தை எடுக்க அவருக்கு சுமார் 10 கோடி சம்பளம் வாங்கியுள்ளாராம் இந்த படம் வெளிவந்து மாபெரும் ஹிட் கொடுக்கும் பட்சத்தில் நெல்சன் சம்பளம் 20 கோடியாக உயரவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்..