ஆரம்பத்தில் ஹிட் படங்களை கொடுத்து வந்த நடிகர்கள் காலங்கள் போக போக நல்ல கதைகளை தேர்வு செய்யாமல் வெற்றி படங்களை கொடுக்க முடியாமல் அல்லாடி வருகின்றனர் தற்பொழுது இந்த லிஸ்டில் இடம் பிடித்து உள்ளவர் தான் விஷால். முதலில் திமிரு, செல்லமே, சண்டக்கோழி, துப்பறிவாளன் என சொல்லிக் கொண்டே போகலாம்
அந்த அளவுக்கு ஹிட் படங்களை கொடுத்து தனது மார்க்கெட்டை மிகப்பெரிய அளவில் உயர்த்திக்கொண்டு அஜித் விஜய் லெவலுக்கு அப்பொழுது பேசப்பட்டார் ஆனால் அதன் பிறகு இவர் நடித்த திரைப்படங்கள் சொல்லிக் கொள்ளும்படி நல்ல விமர்சனத்தை கூட பெறவில்லை இதனால் அவரது படங்கள் பெரும் தோல்வியை சந்தித்து வந்தன.
அதிலிருந்து மீண்டு வர விஷாலும் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார் அந்த வகையில் கடைசியாக வினோத்குமார் உடன் கைகோர்த்து விஷால் நடித்த திரைப்படம் தான் லத்தி. இந்த திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு ஆக்சன் திரைப்படமாக உருவாகியது. இதில் விஷாலுடன் கைகோர்த்து சுனைனா, பிரபு மற்றும் பல நட்சத்திர பட்டாளமே நடித்தது
படம் அண்மையில் வெளிவந்த ஆரம்பத்தில் கலவையான விமர்சனத்தை பெற்று ஓடினாலும் எதிர்பார்த்த வசூலை பெற தவறியது இப்படி இருக்கின்ற நிலையில் அடுத்தடுத்த நாட்களில் வசூல் மாறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் இருந்து வருகிறது
இப்படி இருக்கின்ற நிலையில் ஏழு நாள் முடிவில் விஷால் நடித்த லத்தி திரைப்படம் எவ்வளவு வசூல் அள்ளி உள்ளது என்பது குறித்து தகவல் கிடைத்திருக்கிறது அதன்படி பார்க்கையில் இதுவரை மட்டுமே லத்தி சார்ஜ் திரைப்படம் வெறும் 7 கோடி மட்டுமே வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.