பகாசூரன் படத்திற்காக “மோகன் ஜி” வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

bakasuran
bakasuran

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர் மோகன் ஜி. முதலில் “பழைய வண்ணாரப்பேட்டை” என்னும் படத்தை எடுத்து தன்னை வெளி உலகத்திற்கு காட்டிக் கொண்டார் அதன் பிறகு நடிகர் அஜித்தின் மச்சான் ரிச்சர்ட் ரிஷிவுடன் முதல்முறையாக கூட்டணி அமைத்து “திரௌபதி” என்னும் படத்தை எடுத்தார்.

இந்த படம் ஒரு ஜாதி படமாக இருந்தாலும்.. ஆரம்பத்திலேயே இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து இருந்தது படமும் வெளிவந்து அதை பூர்த்தி செய்தது. படம் பெரிய அளவில் பேசப்பட்டதோடு மட்டுமல்லாமல் வசூலில் ருத்ர தாண்டவம் ஆடியது. அடுத்த சில மாதங்களிலேயே மீண்டும் இந்த ஜோடி உடனடியாக கூட்டணி அமைத்து “ருத்ரதாண்டவம்” என்னும் படத்தையும் எடுத்தது.

இந்தப் படத்தில் ஆக்சன் என அனைத்தும் கலந்த அற்புதமான படமாக இருந்ததால் இந்த படமும் வெற்றியை பதிவு செய்தது. இதனால் மோகன் ஜி – யின் மார்க்கெட் சரசரவென உயர்ந்தது இந்த நிலையில் தான் இயக்குனரும், நடிகருமான செல்வராகவனை சந்தித்து பகாசூரன் கதையை சொன்னார். அவருக்கு ரொம்ப பிடித்து போகவே உடனடியாக படமாக உருவானது.

முழுக்க முழுக்க பெண்களுக்கான ஒரு படமாக இருந்தது இதனால் ரசிகர்களையும் தாண்டி குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பை முதல் நாளை பெற்றது தொடர்ந்து இந்த படத்திற்கான பாசிட்டிவ் விமர்சனங்கள் வருவதால் தொடர்ந்து வசூலிலும் ஓரளவு நன்றாகவே அள்ளி வருகிறது இதுவரை மட்டுமே கிட்டதட்ட 5 கோடிக்கு மேல் வசூல் அள்ளி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன வருகின்ற நாட்களிலும் வசூல் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் பகாசூரன் படத்தை இயக்கி வெற்றிகண்ட மோகன் ஜி. இந்த படத்தை இயக்க எவ்வளவு சம்பளம் வாங்கி உள்ளார் என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது அதன்படி பார்க்கையில் மோகன் ஜி இந்த படத்திற்காக சுமார் 30-ல் இருந்து 35 லட்சம் வரை சம்பளம் வாங்கி இருப்பார் என சொல்லப்படுகிறது. தன்னுடைய படங்களில் பெரிய நடிகர்கள் நடித்தால் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கவும் அவர் ரெடியாக இருக்கிறார் என சொல்லப்படுகிறது.