தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு இயக்குனர் கே. எஸ். ரவிக்குமார். இவர் முதலில் நடிகராக தன்னை சினிமா உலகில் அறிமுகப்படுத்திக் கொண்டு பின் இயக்குனர் அவதாரம் எடுத்தார். புரியாத புதிர் என்னும் படத்தை எடுத்து முதலில் தன்னை அறிமுகப்படுத்தினார் அதன் பிறகு இவர் சேரன் பாண்டியன், பொண்டாட்டி ராஜ்ஜியம், நாட்டாமை, முத்து, பிஸ்தா, நட்புக்காக, சூரியவம்சம்..
தெனாலி, வில்லன், வரலாறு என அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து ஓடினார். ஆனால் கடந்த சில வருடங்களாக படங்களை இயக்குவதை விட்டுவிட்டு நடிப்பில் மட்டுமே அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார். அதுவும் வருடத்திற்கு குறைந்தது மூன்று படங்களில் நடிப்பதால் இவருக்கான மார்க்கெட் உயர்ந்து கொண்டே இருக்கிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் கே. எஸ். ரவிக்குமார் பற்றி ஒரு தகவல் வெளியாகியுள்ளது இவர் எத்தனையோ ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார் அதில் இப்பொழுதும் பேசக்கூடிய ஒரு படம் என்றால் நாட்டாமை திரைப்படம் தான். 1995ஆம் ஆண்டு கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார் நடிப்பில் உருவானது.
படத்தில் நடிகர் சரத்குமார் உடன் இணைந்து விஜயகுமார், மீனா, பொன்னம்பலம், ஈரோடு சவுந்தர், குஷ்பூ, சங்கவி, கவுண்டமணி, செந்தில், மனோரமா, வினு சக்கரவர்த்தி, பாண்டு, ராணி என பலமுறை பட்டாளங்கள் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்து அசத்தினார். இந்த படம் முழுக்க முழுக்க குடும்ப செண்டிமெண்ட், காமெடி என அனைத்தும் கலந்த படமாக இருந்தது.
55 லட்சம் மதிப்பில் உருவான நாட்டாமை திரைப்படம் அப்பொழுது வெளிவந்து பல கோடி அள்ளி புதிய சாதனை படைத்தது. நாட்டாமை திரைப்படத்தை இயக்கியதற்காக கே. எஸ். ரவிக்குமார் சுமார் 5 லட்சம் ரூபாய் அப்பொழுது சம்பளம் வாங்கினாராம் இந்த தகவலை அவரே சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.