கார்த்தியின் “விருமன் திரைப்படம்” – 7 நாள் முடிவில் தமிழகத்தில் மட்டும் அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.?

viruman
viruman

இயக்குனர் முத்தையா மற்றும் கார்த்திக் நடிப்பில் இரண்டாவது முறையாக உருவாகி வெளிவந்த திரைப்படம் விருமன். இயக்குனர் முத்தையா கார்த்தியை வைத்து இயக்கி கொம்பன் எனும் திரைப்படத்தை கொடுத்தார். அந்த படம் கிராமத்து பின்னணியில் உருவாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தை தொடர்ந்து கார்த்தியும் அடுத்தடுத்து பல ஹிட் படங்களை கொடுத்து அசத்தி வந்தார். நீண்ட இடைவேளைக்கு பிறகு கார்த்தி மீண்டும் முத்தையா உடன் இணைந்து விருமன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி வெற்றி நடை கண்டு வருகிறது.

நடிகர் கார்த்தி கிராமத்து கதையில் சிறப்பாக நடிக்க கூடியவர். அதுபோன்ற கதையில் அவர் நடித்த படங்களும் பல ஹிட் அடித்த நிலையில் மீண்டும் அதே பின்னணியில் உருவாகிய விருமன் திரைப்படமும்.. கார்த்திக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்துள்ளது. இந்த படத்தில் ஹீரோயினாக முதல்முறையாக இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் நடித்துள்ளார்.

இவரது நடிப்பை பார்க்கவே பலரும் திரையரங்கை நாடி வருகின்றனர். அதிதி சங்கரின் நடிப்பும் இந்த படத்தில் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. மேலும் இந்த படத்தில் அதிதி கஞ்சா பூ கண்ணால என்ற பாடலையும் பாடி அசத்தியுள்ளார் இந்த பாடல் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் செம டிரண்டாகி வருகிறது. விருமன் படம் வெளியாகி ஒவ்வொரு நாளும் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகின்றன.

அதனால் அண்மையில் விருமன் படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சி கூட அரங்கேறியது இதில் படக்குழு பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த நிலையில் விருமன் திரைப்படம் வெளியாகி 7 நாள் முடிவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் கிடைத்துள்ளது. அதன்படி பார்க்கையில் 7 நாள் முடிவில் மொத்தமாக தமிழகத்தில் சுமார் 40 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.