நடிகர் கார்த்தி வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிப்பது வழக்கம் அந்த படங்களும் வெளிவந்து வெற்றி பெறுகின்றன அதனால் நடிகர் கார்த்தியின் மார்கெட் சினிமா உலகில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. நடிகர் கார்த்தி கடைசியாக நடித்த விருமன், பொன்னியின் செல்வன் போன்ற படங்கள்..
வசூல் ரீதியாக பிரமாண்ட வெற்றியை ருசித்த நிலையில் அடுத்ததாக இயக்குனர் பி எஸ் மித்திரனுடன் கைகோர்த்து நடிகர் கார்த்தி நடித்த திரைப்படம் தான் சர்தார் இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து அசத்தினார் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், பாடல் என அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று படம் கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது.
‘இந்த படம் முழுக்க முழுக்க தண்ணியை பற்றி எடுத்துரைக்கும் ஒரு சமூக அக்கறை உள்ள படமாக இருந்ததால் இந்த படம் பலருக்கும் பிடித்து போய் உள்ளது. கார்த்தியின் சர்தார் திரைப்படத்தில் ரஜிஷா விஜயன், ராசி கண்ணா, லைலா, சிம்ரன், முரளி, முனீஸ்காந்த், லொள்ளு சபா சுவாமிநாதன் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் இந்த படத்தில் நடித்திருந்தனர்.
இந்த படம் இதுவரை மட்டுமே இந்த படம் நல்ல வரவேற்பு தான் பெற்று வருகிறது அதன் காரணமாக இந்த படத்தின் வசூலும் அதிகரித்து உள்ளது முதல் நாளில் மட்டுமே கார்த்தியின் சர்தார் திரைப்படம் 4.5 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது வருகின்ற நாட்கள் விடுமுறை நாட்கள் என்பதால் நடிகர் கார்த்தியின் சர்தார் படத்தின் வரவேற்பு அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
இந்த படத்தை எதிர்த்து சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த ரேசில் இருவரில் யாரேனும் ஒருவர் தான் ஜெயிக்கப் போகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.