இந்த ஆண்டு பல முன்னணி நடிகர்களுக்கு நல்ல ஆண்டாக அமைந்திருக்கிறது அந்த வகையில் நடிகர் கார்த்திக்கு இந்த வருடம் அமோக வருடம் ஏனென்றால் இந்த வருடத்தில் மட்டுமே அவரது 3 திரைப்படங்கள் வெளிவந்து வெற்றி பெற்று இருக்கின்றன. முதலில் விருமன் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியாக வெற்றி அடைந்தது.
அதனைத் தொடர்ந்து கார்த்தி நடித்த திரைப்படம் பொன்னியின் செல்வன். கல்கி எழுதிய வரலாற்று கதை படமாக எடுத்தால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலேயே அதிகரித்து இருந்தது படத்தில் அனைத்து நடிகர்களின் நடிப்பும் பிரமாதமாக இருந்தது குறிப்பாக கார்த்தியின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது.
இந்த படம் விமர்சன ரீதியாக வெற்றி பெற்று வசூல் ரீதியாக 500 கோடி வசூலித்து சாதனை படைத்தது இந்த வருடத்தில் அதிக வசூல் செய்த திரைப்படமாக பொன்னியின் செல்வன் படம் இருக்கிறது. இந்த இரண்டு படங்களை தொடர்ந்து கார்த்தி நடித்த படம் சர்தார். இந்த திரைப்படம் அண்மையில் தீபாவளி முன்னிட்டு கோலாகலமாக ரிலீஸ் ஆனது.
இந்த படம் ஒரு சமூகப் பிரச்சனை எடுத்துரைக்கும் படமாக இருந்தது மேலும் சர்தார் படத்தின் கதைக்கு ஏற்றபடி இரண்டு கதாபாத்திரத்தில் கார்த்தி சூப்பராக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் படம் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது அதன் காரணமாக இந்த படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் படம் வெளியாகி இதுவரை எவ்வளவு வசூல் சாதனை செய்துள்ளது என்பது குறித்து தகவல்களை தெரிகிறது அதன்படி பார்க்கையில் இந்த திரைப்படம் இதுவரை உலகம் முழுவதும் 85 கோடி வரை வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. வருகின்ற நாட்களில் சர்தார் படத்தின் வசூல் அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது.