Jailer : தமிழ் சினிமாவில் 40 வருடங்களுக்கு மேலாக நடித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவர் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான ஜெயிலர் திரைப்படம் நேற்று காலகாலமாக உலகம் முழுவதும் 4000 -த்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது .
படத்தில் ரஜினியுடன் இணைந்து மோகன்லால், சிவ ராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, சுனில், வசந்த் ரவி, விநாயகன் மற்றும் பல டாப் நட்சத்திர நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர். ஜெயிலர் படம் எதிர்பார்த்ததை விட காமெடி, ஆக்சன், சென்டிமென்ட் என அனைத்தும் கலந்த ஒரு அற்புதமான படமாக இருந்ததால்..
ரசிகர்களையும் தாண்டி குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் கைத்தட்டல் வாங்கியது. மேலும் கூட்டம் கூட்டமாக படத்தை பார்த்து வருகின்றனர். அதன் காரணமாக படம் முதல் நாளே நல்ல விமர்சனத்தை பெற்று உள்ளது. இதனால் அடுத்தடுத்த நாட்களிலும் இந்த படத்தை பார்ப்பவர் எண்ணிக்கை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் முதல் நாளில் ஜெயிலர் திரைப்படம் எவ்வளவு வசூல் அள்ளி உள்ளது என்பது குறித்து நமக்கு தகவல் கிடைத்திருக்கிறது அதன்படி பார்க்கையில் ஜெயிலர் திரைப்படம் முதல் நாளில் இந்தியா முழுவதும் சுமார் 49 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன வெளிநாடுகளில் ஜெயிலர் படம் வெற்றி நடை கண்டு வருகிறது. அதனால் அங்கேயும் நல்ல வசூலை அள்ளி உள்ளது.
அமெரிக்காவில் 1.45 மில்லியன் டாலர்கள் வசூலித்துள்ளதாம். இந்திய மதிப்பில் 12 கோடி ரூபாய் என சொல்லப்படுகிறது. வருகின்ற நாட்கள் விடுமுறை நாட்கள் என்பதால் ஜெயிலர் படத்தின் வசூல் அதிகரிக்கும் இதனால் படக்குழுவும் சரி, ரஜினியும் சரி செம்ம குஷியில் இருந்து வருகின்றனர்.