ஒரு நாள் மேக்கப் போட்டு நடிக்க மட்டுமே சமந்தா, நயன்தாராவுக்கு ஆகும் செலவு எவ்வளவு தெரியுமா.? கடும் கோபத்தில் தயாரிப்பாளர்.

samantha and nayanthara
samantha and nayanthara

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகைகளாக இருப்பவர்கள் நயன்தாரா மற்றும் சமந்தா. இருவரும் தொடர்ந்து டாப் நடிகர்களின் படங்களை கைப்பற்றி மற்றும் சோலோ படங்களில் நடித்து தனது மார்க்கெட்டை பெரிய அளவில் உயர்த்தி கொண்டனர். இவரது படங்கள் ஒவ்வொன்றும் பெரியளவு ஹிட் அடிக்கின்ற நிலையில் தனது சம்பளத்தையும் பல கோடி உயர்த்தி உள்ளனர்.

இவர்கள் இப்படி அதிரடியாக சம்பளத்தை உயர்த்தி உள்ளது படத்தை எடுக்கும் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களின் நிலைமை தான் கவலைக்கிடம். ஏனென்றால் இவர்களது சம்பளம் போக உதவியாளர்கள் பவுன்சர்கள் மேக்கப் என இதற்கே பல கோடி ஆகின்றன. நடிகைகள் பெரும்பாலும் இயக்குனர்களிடம் கதை கேட்டு ஓகே சொல்லி விடுகின்றனர்.

இயக்குனரும் படத்திற்கு தேவையான மற்ற நடிகர் நடிகைகளை தேர்வு செய்து புக் செய்து விடுவார். பின்பு இந்த நடிகர் நடிகைகளுக்கு கொடுக்கும் சம்பளம் இல்லாமல் பல செலவுகள் இயக்குனர்களுக்கு வந்து விடும். அதாவது இயக்குனர்கள் அவர்களுடன் பணிபுரியும் உதவி இயக்குனருக்கு சம்பளம் நடிகர்களுடன் உதவியாக வரும் பணியாளர்கள், நடிகைகளுடன் உதவிக்கு வரும் பணியாளர்கள் மற்றும் நடிகைகளின் மேக்கப் அதுவும் நடிகைகள் விருப்பப்படும் உயர்தர காஸ்ட்யூம்ஸ் மட்டுமே வாங்க வேண்டும் என கூறுவார்கள்.

குறிப்பாக டாப் நடிகையான சமந்தா நயன்தாரா போன்றவர்கள் தங்களை அழகாக காண்பிக்க முன்னணி மேக்கப் கலைஞர்களே புக் செய்வார்கள். அப்படி அவர்கள் சூட்டிங் ஸ்பாட்டில் மேக்கப்புக்கு மட்டுமே பல ஆயிரங்கள் செலவாகின்றன. லேடி சூப்பர் ஸ்டார்  நயன்தாரா மேக்கப் செலவுக்கு ஒரு நாளைக்கு அந்த மேக்கப் கலைஞருக்கு மட்டுமே சுமார் 55,000 கொடுக்கப்படுகிறது.

இவரைத் தொடர்ந்து சமந்தாவின் மேக்கப் கலைஞருக்கு ஒரு நாளைக்கு 40,000 சம்பளம் கொடுக்கப்படுகிறது. இது படத்தின் ஷூட்டிங் முடியும் நாட்கள் வரை ஒவ்வொரு நாளுக்கும் இப்படி செலவாகினால் கிட்டத்தட்ட 100 நாட்களுக்கு அந்த நடிகைகளின் சம்பளத்தையே தொட்டுவிடும் என கூறப்படுகிறது.