தளபதி 68 படத்தில் விஜயின் சம்பளம் இத்தனை கோடியா.? வாயடைத்து போன சினிமா பிரபலங்கள்

தமிழ் சினிமாவில் இன்று வசூல் சக்கரவர்த்தியாக பார்க்கப்படுபவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த பீஸ்ட், வாரிசு படங்கள் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்த பொழுதிலும் வசூல் ரீதியாக வெற்றியடைந்தது இருந்தாலும்..’

விஜய் அடுத்த படத்தை ஒரு தரமான படமாக கொடுக்க லோகேஷ் உடன் இரண்டாவது முறையாக கைகோர்த்து லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் மிகப்பெரிய ஒரு ஆக்சன் பேக் திரைப்படமாக உருவாகி வருகிறது. படத்தில் விஜயுடன் இணைந்து அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த், திரிஷா, சஞ்சய் தத், பிக் பாஸ் ஜனனி மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள்  நடித்து வருகின்றனர்.

இந்தப் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அட்லீ அல்லது வேறு ஒரு புது இயக்குனருடன் இணைவார் என ஏற்கனவே தகவல்கள்.. கசிந்த நிலையில் தற்போது அதற்கு விடையும் கிடைத்துள்ளது விஜயின் அடுத்த படத்தை அஜித் பட இயக்குனர் வெங்கட் பிரபு தான் இயக்க உள்ளார்.

இவர் கடைசியாக நாக சைத்தான்யாவை வைத்து கஸ்டடி என்னும் படத்தை எடுத்திருந்தார். அந்த படம் வெளிவந்து நல்ல விமர்சனத்தை பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது. இதனால் விஜய் மற்றும் வெங்கட் பிரபு இணையும் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும்..

இந்த படத்திற்கு எவ்வளவு சம்பளம் வாங்க இருக்கிறார் என்பது குறித்து ஒரு தகவல் கிடைத்துள்ளது அதன்படி பார்க்கையில் இந்த படத்தில் விஜயின் சம்பளம் சுமார் 150 கோடி இருக்கும் என கூறப்படுகிறது இது உண்மையாகும் பட்சத்தில் தென்னிந்திய சினிமா உலகில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் முதலிடத்தை விஜய் பிடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.