“வாரிசு” படத்தின் மொத்த பட்ஜெட் இத்தனை கோடியா.? விஜயின் சம்பளம் எவ்வளவு தெரியுமா..

vijay-
vijay-

தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் கடைசியாக நடித்த பீஸ்ட் படம் வெளியாகி பிரம்மாண்ட வெற்றியை ருசித்தது அதை  தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் வம்சியுடன் முதல் முறையாக கூட்டணி அமைத்து தனது 66-வது திரைப்படமான வாரிசு படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். தில் ராஜு இந்த படத்தை தயாரித்து வருகிறார்.

வாரிசு படத்தில் விஜயுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, ஜெயசுதா, சரத்குமார், பிரபு, ஸ்ஷாம், ஸ்ரீகாந்த், யோகி பாபு, சங்கீதா மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர் இந்த படத்தின்  இறுதி கட்ட ஷூட்டிங் சென்னையில் உள்ள எண்ணூர்  பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது இந்த படம் முழுக்க முழுக்க ஒரு குடும்ப செண்டிமெண்ட் படமாக உருவாகி வருகிறதாக கூறப்படுகிறது.

அதேசமயம்  ஆக்ஷன், காமெடி என அனைத்தும் கலந்த ஒரு படமாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த படத்தில் மொத்தம் 6 பாடல்கள் இடம் பெற உள்ளதாக தகவல்கள் வெளி வருகின்றன மேலும் விஜயின் யூத் படத்தில் இடம்பெற்றுள்ள ஆல்தோட்ட பூபதி பாடல் ரீமேக் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளி வருகின்றன இந்த படம் நிச்சயம் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் என தகவல்கள் வெளி வருகின்றன.

இப்படி இருக்கின்ற நிலையில் வாரிசு படத்தின் மொத்த பட்ஜெட் எவ்வளவு விஜய்க்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்பட இருக்கிறது என்பது குறித்து தகவல் வெளிவந்துள்ளது அதாவது வாரிசு படத்தின் மொத்த பட்ஜெட் 200 கோடி இதில் படத்தை தயாரிக்க கிட்டத்தட்ட 50 கோடி செலவு செய்து உள்ளனர்.

விஜய் தவிர மற்ற நடிகர்களுக்கு 30 கோடியும் விஜய்க்கு சம்பளமாக 120 கோடியும் கொடுத்திருக்கின்றனர் என தகவல்கள் வெளி வருகின்றன. ஏற்கனவே வாரிசு படத்தின் டிஜிட்டல் மற்றும் சேட்டிலைட் உரிமம் போன்றவை பல கோடிகள் விற்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.