பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் திரை உலகில் இதுவரை எடுத்த பெரும்பாலான படங்கள் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தான் எடுத்திருக்கிறார் அதே சமயம் அந்த படங்கள் படத்தின் பட்ஜெட்டையும் தாண்டி பல நூறு கோடி வசூல் செய்வதால் தொடர்ந்து பிரம்மாண்ட பட்ஜெட்டிலேயே அவர் படங்களை எடுத்து வருகிறார்.
இப்பொழுது கூட உலக நாயகன் கமலஹாசனை வைத்து இந்தியன் 2 மற்றும் தெலுங்கில் ராம்சரணை வைத்து RC 15 என்ற படத்தையும் எடுத்து வருகிறார் ஆனால் மக்கள் பெரிதும் எதிர்பார்த்து இருக்கும் திரைப்படம் கமலின் இந்தியன் 2 திரைப்படத்தை தான் இந்த படத்தின் ஷுட்டிங் 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டிருந்தாலும்..
ஆரம்பத்தில் ஷூட்டிங்கில் நடந்த சில அசம்பாவிதம் காரணமாக படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் அரசியல் படம் என மற்றவற்றில் ஆர்வம் காட்ட ஷங்கர் தெலுங்கு பக்கம் சென்றார் இதனால் இந்தியன் 2 படம் தொடங்கப்படாமல் அப்படியே இருந்தது. ஆனால் இந்தியன் 2 படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் ஒரு வழியாக அனைவரையும் இழுத்து பிடித்து..
தற்போது மீண்டும் ஷுட்டிங்கை தொடங்கி உள்ளது இந்தியன் 2 திரைப்படத்தின் சூட்டிங் தற்போது விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது இந்த படத்தில் கமலுடன் கைகோர்த்து பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, ஐஸ்வர்யா ராஜேஷ், டெல்லி கணேஷ், ஜார்ஜ் மரியான், யோகி பாபு, மனோபாலா, சமுத்திரகனி, ஜெயபிரகாஷ், ஆடுகளம் நரேன் மற்றும் பல முன்னணி நட்சத்திர நடிகர் நடிகைகள் நடித்து வருகின்றனர்.
இப்படி இருக்கின்ற நிலையில் இந்தியன் 2 திரைப்படம் குறித்து ஒரு சூப்பரான தகவல் வெளியாகி உள்ளது அதாவது இந்தியன் 2 திரைப்படத்தின் மொத்த பட்ஜெட் எவ்வளவு என்பதுதான். இந்த படத்தின் பட்ஜெட் மொத்தம் 231 கோடி என சொல்லப்படுகிறது. பொன்னியின் செல்வன் படத்தை தொடர்ந்து மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகுவது இந்தியன் 2 திரைப்படம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.