90 காலகட்டங்களில் அஜித் விஜய் போன்ற நடிகர்களை பின்னுக்கு தண்ணி தொடர்ந்து வெற்றி மேல் வெற்றி படங்களை கொடுத்து தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாலத்தை உருவாக்கிக் கொண்டவர் நடிகர் பிரசாந்த். முதலில் வைதேகி பிறந்தாச்சு என்ற படத்தில் நடித்து சினிமா உலகில் கால் தடம் பதித்தார் அதன் பின் தமிழ் சினிமாவில் இவர் தேர்ந்தெடுத்து நடித்த திரைப்படங்கள்..
ஒவ்வொன்றும் வெற்றி படங்களாக மாறியது குறிப்பாக பிரசாந்தின் கேரியரில் பெரிதும் பேசப்பட்ட திரைப்படங்கள் ஜீன்ஸ், ஜோடி, குட் லக், சாக்லேட், ஸ்டார், மஜ்னு என பல படங்களை சொல்லலாம். அந்த அளவிற்கு ஹிட் படங்கள் கொடுத்தார் ஆனால் ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொண்டார் அதன் பிறகு நடிகர் பிரசாந்த் சினிமா உலகில் சரிவை சந்திக்க ஆரம்பித்ததார்.
தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்ததால் அவர் ஒரு இடத்தில் சினிமாவில் இருக்கிறாரா இல்லையா என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டார் இருப்பினும் மீண்டும் அதில் சாதிக்க வேண்டும் என்ற உணர்வு மட்டும் பிரசாந்த்துக்கு அதிகமாக இருந்தது அந்த வகையில் ஹிந்தியில் சூப்பர் ஹிட் அடித்த படத்தின் ரீமேக்கை தமிழில் அந்தகன் என்ற பெயரில் பிரசாந்த்தின் அப்பா இயக்க அதில் பிரசாந்த் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் வில்லியாக சிம்ரன் நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் வெற்றிகரமாக முடிந்த நிலையை போஸ்ட் ப்ரோமோஷன் வேலைகள் மிக தீவிரமாக போய்க்கொண்டிருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் பிரசாந்த் சேர்த்து வைத்திருக்கும் சொத்து மதிப்பு குறித்து ஒரு தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி பார்க்கையில் நடிகர் பிரசாந்தின் சொத்து மதிப்பு சுமார் 85 கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது இது அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இல்லை என்றாலும் சினிமா வட்டாரங்கள் மத்தியில் பேசப்படுகிறது நடிகர் பிரசாந்த் ஒரு நகைக்கடை ஒன்றையும் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.