வெள்ளிதிரையில் எப்படி போட்டிகள் இருக்கிறது அதேபோல சின்னத்திரையிலும் உண்டு வார வாரம் TRP -யில் யார் நம்பர் ஒன் இடத்தை பிடிக்கிறார்கள் என பார்ப்பது வழக்கம்.. அந்த வகையில் விஜய் டிவி தொலைக்காட்சி, ஜீ தமிழ், சன் டிவி போன்ற தொலைக்காட்சிகளுக்கு எப்பொழுதுமே போட்டிகள் இருந்து வண்ணமே இருக்கின்றன.
இருப்பினும் சன் டிவி எப்பொழுதுமே TRP யில் உச்சத்தில் இருக்கும்.. இது ஒரு ஃபேமஸான தொலைக்காட்சி இதில் பல ரியாலிட்டி ஷோ மற்றும் சீரியல் வெளிவந்து மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்து இழுக்கின்றன. அந்த வகையில் தற்பொழுது மக்கள் மற்றும் இல்லத்தரசிகளுக்கு ரொம்பவும் பிடித்த சீரியல் ஆக பார்க்கப்படுவது எதிர்நீச்சல்..
இந்த சீரியல் தற்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது இந்த சீரியலில் ஆரம்பத்தில் இருந்து இப்பொழுது வரை அடுத்தடுத்து என்ன நடக்கும் என விறுவிறுப்பாக போய்க்கொண்டே இருக்கிறது. எதிர்நீச்சல் சீரியல் முழுக்க முழுக்க குணசேகரனுக்கும் அவரது தம்பிக்கும் பெண்களை அடிமைகள் போல நடத்தி வருகின்றனர்.
ஆனால் இந்த வீட்டுக்குள் இருக்கும் அந்த பெண்கள் சுதந்திரமாக எப்பொழுது பறக்க போகிறார்கள் என்பதே இந்த சீரியலின் கதைக்களம் தற்பொழுது விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரமாக பார்க்கப்படும் குணசேகரன் கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் மாரிமுத்து நடித்து வருகிறார் இவர் தமிழ் சினிமா உலகில் பல டாப் ஹீரோக்களின் படங்களில் வில்லனாகவும்..
குணச்சித்ர கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கின்ற நிலையில் எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகைகள் ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது அதன்படி பார்க்கையில் குணசேகரன் – 20000 ஞானம் – 15000 கதிர்வேல் – 120000, சக்தி – 10000 என வாங்கி வருகின்றனர்