“நெஞ்சுக்கு நீதி” திரைப்படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா.?

udhayanithi stalin
udhayanithi stalin

அண்மைகாலமாக ஆக்சன் மற்றும் சமூக அக்கறை உள்ள திரைப்படங்கள் வெளிவந்து அசத்துகின்றன. அப்படி அஜித்தின் வலிமை, விஜய்யின் பீஸ்ட் ஆகிய படங்கள் ஆக்சன் படங்களாக அமைந்திருந்தன சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் அதனைத் தொடர்ந்து இப்பொழுது வெளிவந்த உதயநிதி ஸ்டாலினின் நெஞ்சுக்கு நீதி.

திரைப்படமும் சமூக அக்கறை உள்ள ஒரு திரைப்படமாகவே உள்ளது இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை நடிகரும் இயக்குனருமான அருண்ராஜா காமராஜ் இயக்கியிருந்தார். உதயநிதி ஸ்டாலின் நடித்து அசத்தி இருந்தார்.

இவருக்கு ஜோடியாக தனியா மிரட்டி இருந்தார் மேலும் சில முக்கிய நடிகர் நடிகைகள் பின்னி பெடலெடுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த படம் ஹிந்தி படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது இருப்பினும் தமிழிலும் நல்ல வரவேற்ப்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது நேற்று தான் இந்த படம் ரிலீஸ் ஆனது.

தொடர்ந்து மக்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருவதால் முதல் வாரம் ஹவுஸ்புல்லாக ஓடும் என கணிக்கப்படுகிறது. முதல் நாளில் மட்டுமே சுமார் 1.50 கோடி வசூல் செய்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வருகின்ற நாட்களில் இந்த படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.

சொல்லப்போனால் நெஞ்சுக்கு நீதி திரைப்படம் உதயநிதி ஸ்டாலினின் சினிமா பயணத்தில் ஒரு முக்கிய திரைப்படமாக அமைய அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. உதயநிதி ஸ்டாலினுக்கு நெஞ்சுக்கு நீதி படத்தைத் தொடர்ந்து மாமன்னன் என்ற ஒரு திரைப்படம் தான் இருக்கிறது அதன் பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விடப் போவதாக அவரே பேட்டி ஒன்றில் அண்மையில் தெரிவித்துள்ளார்.