தோல்வியை காணாத இயக்குனர்கள் விரல்விட்டு என்னும் அளவிற்கு தான் இருக்கிறார்கள் அந்த லிஸ்ட்டில் இடம் பிடித்துள்ளவர் தான் இளம் இயக்குனர் லோகேஷ். இவர் முதலில் மாநகரம் என்னும் படத்தை எடுத்து அறிமுகமானார் அதனை தொடர்ந்து கார்த்தியை வைத்து கைதி..
விஜயை வைத்து மாஸ்டர், கமலை வைத்து விக்ரம் என அடுத்தடுத்த பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்த லோகேஷ் தற்பொழுது விஜய்யுடன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்து லியோ திரைப்படத்தை எடுத்து வருகிறார் இந்த படம் முழுக்க முழுக்க பக்க ஆக்சன் திரைப்படமாக உருவாகி வருகிறது படத்தின் 60 நாள் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்த..
நிலையில் மீதியை 60 நாள் படப்பிடிப்பு தொடங்கப்பட இருப்பதாக லோகேஷ் தெரிவித்தார் அதன்படி சைலண்டாக மூன்றாவது கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. லியோ படத்தில் விஜயுடன் கை கொடுத்து சஞ்சய் தத், மிஷ்கின், மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், பிரியா ஆனந்த், திரிஷா, பிக்பாஸ் ஜனனி..
மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. லோகேஷ் தனி ஒருவனாக பிடிப்பு தளத்தில் நின்று படத்தை எடுத்து வருகிறார் இந்த படத்தை தொடர்ந்து லோகேஷன் ரஜினியின் 171 வது திரைப்படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளி வருகின்றன இதற்கான அறிவிப்பு வரும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் சூப்பர்ஸ்டார் ரஜினியின் 171 வது படத்தை இயக்க லோகேஷுக்கு சுமார் 60 கோடியே சம்பளம் பேசப்பட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் மத்தியில் ஒரு செய்தி காட்டு தீ போல பரவி வருகிறது. லோகேஷ் ஒவ்வொரு படத்தின் வெற்றியை போதும் சம்பளத்தை உயர்த்துவதால் இந்த சம்பளம் வாங்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. பொறுத்து இருந்து பார்ப்போம் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்..