நடிகர் அஜித்குமாருக்கு ஒருவரை பிடித்து விட்டால் அவருடன் தொடர்ந்து படம் பண்ணுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் அந்த வகையில் இயக்குனர் சரண் உடன் அதிக படம் பண்ணினார் அடுத்ததாக சிறுத்தை சிவா இப்போது ஹச். வினோத்துடன் மூன்று படம் பண்ணிவிட்டார் இதில் கடைசியாக வெளிவந்த துணிவு திரைப்படம்..
நல்ல மெசேஜ், ஆக்சன், காமெடி என அனைத்தும் கலந்த ஒரு சூப்பரான படமாக இருந்ததால் படம் வெளிவந்து ரசிகர்களையும் தாண்டி குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது அதன் காரணமாக வசூலிலும் எந்த குறையும் வைக்கவில்லை.. இப்படி இருக்கின்ற நிலையில் துணிவு படத்தின் மூலம் தயாரிப்பாளருக்கு கிடைத்த லாபம் எவ்வளவு என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. துணிவு திரைப்படத்தின் பட்ஜெட் 145 கோடி ஆனால் படம் வெளிவருவதற்கு முன்பாக பிசினஸ் மூலமாகவே 193 கோடி அள்ளியது இதன் மூலம் தயாரிப்பாளர்கள் கிடைத்த லாபம் மட்டுமே 48 கோடியாம்.. துணிவு திரைப்படத்தை லைகா நிறுவனம் வெளிநாட்டில் வெளியிட்டது.
இதில் 65 கோடி வரை வசூல் செய்தது ஷேர் 24 கோடி கிடைத்தது இதில் 7 கோடி லைகா நிறுவனத்திற்கு லாபம் கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆந்திரா, தெலுங்கானா துணிவு படம் 5 கோடி வரை வசூல் செய்தது இதிலிருந்து 2.5 கோடி ஷேர் கிடைத்து உள்ளது. இதன் மூலம் வினியோஸ்தர்களுக்கு லாபமும் இல்லை, நஷ்டமும் இல்லை என சொல்லப்படுகிறது.
கர்நாடகாவில் வினியோஸ்தர்களுக்கு ஒரு கோடி லாபம் கிடைத்துள்ளது, கேரளாவில் வினியோஸ்தர்களுக்கு ஒரு கோடி நஷ்டம் ஏற்பட்டு இருக்கும் என சொல்லப்படுகிறது மொத்தத்தில் ஆந்திரா, தெலுங்கில், கேரளா போன்றவற்றை தவிர்த்து மற்ற இடங்களில் துணிவு திரைப்படம் லாபத்தை அள்ளி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.