இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் தற்போது உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தை ரசிகர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழ் சினிமாவில் அன்போடு இசைஞானி என்று அழைக்கப்படுபவர் இளையராஜா. கிட்டத்தட்ட பல வருடங்களாக சினிமாவில் ஜொலித்துக் கொண்டிருக்கும் இசைஞானி இளையராஜா அவருடைய சாதனைகளை ரசிகர்கள், பிரபலங்கள் என அனைவரும் பாராட்டி வருகிறார்கள். இன்னும் இளையராஜாவின் சாதனைகளை பெரிய அளவிற்கு கொண்டு செல்ல வேண்டும் என அவரின் வாழ்க்கை வரலாறு தற்போது படமாக்கப்பட்டு வருகிறது.
இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் தனுஷ் அவர்கள்தான் ஹீரோவாக நடித்து வருகிறார். படத்தை அருண் மாதேஸ்வரன் என்பவர் தான் இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியான நிலையில் இந்த நிகழ்ச்சியில் கமல் மற்றும் தனுஷ் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.
மேலும் பல பிரபலங்கள் நிகழ்ச்சியில் பேசிய பொழுது இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் பணியாற்ற காத்துக் கொண்டிருப்பதாக கூறியிருந்தார்கள். மேலும் அருண் மாதேஸ்வரன் எந்த ஒரு அழுத்தமும் இல்லாமல் தனக்கு எப்படி தோன்றுகிறதோ அதே போல் இந்த திரைப்படத்தை இயக்க வேண்டும் என கமலஹாசன் கூறியிருக்கிறார். மேலும் இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாக இருக்கிறது. 50 வருட வாழ்க்கை என்பதால் கண்டிப்பாக இரண்டு பாகங்களாக தான் எடுக்க முடியும் என முடிவு செய்து பேசி உள்ளார்கள்.
சித்ராதேவியையே அலறவிட்ட கோடீஸ்வரி!! கௌதமுக்கே தண்ணி காட்டிய ஐஸ்வர்யா ..
முதல் பாகத்தில் இளையராஜாவின் இளமைக்கால வாழ்க்கையை காண்பிக்க இருப்பதாகவும் அடுத்த பாதி படத்தில் அவர் செய்த சாதனைகளை காட்ட இருப்பதாகவும் திரை பிரபலங்கள் பலரும் கூறி வருகிறார்கள். இந்த திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வரும் தனுஷின் சம்பள விவரம் தற்பொழுது தெரியவந்துள்ளது. தனுஷ் தமிழ் திரையுலகை தாண்டி ஹிந்தி, தெலுங்கு, ஆங்கிலம் என பல மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
பொதுவாக தனுஷ் ஒரு திரைப்படத்திற்கு 20 முதல் 30 கோடி வரை சம்பளம் வாங்கப்பட்டு வருகிறார். இந்த நிலையில் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்திற்காக தனுஷ் 50 கோடி வரை சம்பளமாக வாங்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது படம் கிட்டத்தட்ட இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் என்பதால் 100 கோடி வரை சம்பளமாக வாங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.