ரஜினியின் சூப்பர் ஹிட் படத்தில் நடித்ததற்காக நடிகை த்ரிஷா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

trisha
trisha

சினிமா உலகில் 40 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் ஹீரோவாக இருக்கிறார். இப்பொழுது இவர் வருடத்திற்கு ஒரு படத்தை சிறப்பான முறையில் கொடுத்து அசத்துகிறார் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான அண்ணாத்த திரைப்படம்.

கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக வெற்றி அடைந்தது. அதனைத் தொடர்ந்து தனது 169 ஆவது திரைப்படமான ஜெயிலர் படத்தில் ரஜினி நடிக்க உள்ளார். படத்தின் சூட்டிங் இந்த மாதம் தொடங்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது ஜெயிலர் படத்தை வெற்றி இயக்குனர் நெல்சன் இயக்குகிறார்.

ரஜினியுடன் கைகோர்த்து இந்த படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், பிரியங்கா அருள் மோகன், ரம்யா கிருஷ்ணன் மற்றும் பல பிரபலங்கள் இந்த படத்தில் இணைந்து நடிக்க உள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது இப்படி இருக்கின்ற நிலையில் ரஜினி பற்றிய செய்திகள் வெளி வருவது வழக்கம்.

அப்படி ரஜினி நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் பேட்ட.  இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருந்தார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது இந்த படம் முழுக்க முழுக்க ஆக்சன் செண்டிமெண்ட் கலந்த படமாக உருவாகியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் தனது மாறுபட்ட நடிப்பை ரஜினி வெளிகாட்டி இருப்பார்.

மேலும் இந்த படத்தில் ரஜினி உடன் கைகோர்த்து சிம்ரன், திரிஷா, பாபி சிம்ஹா, சசிகுமார், விஜய் சேதுபதி, முனிஷ்காந்த் மற்றும் பலர் நடித்து அசத்தினர். இந்தப் படத்தில் திரிஷா நடிக்க எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்பது குறித்து தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி பார்க்கையில் பேட்ட படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்ததற்காக இவர் சுமார் ஒரு கோடி சம்பளம் வாங்கி உள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.