Dhanush : தமிழ் சினிமாவில் பிஸியான ஹீரோவாக வருபவர் தனுஷ் இவர் சமீப காலமாக தேர்ந்தெடுத்த நடிக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றுமே வெற்றியை பெறுகின்றன அந்த வகையில் இவர் கடைசியாக நடித்த வாத்தி திரைப்படம் முழுக்க முழுக்க கல்வி சம்பந்தப்பட்ட ஒரு படமாக இருந்ததால்..
ரசிகர்களையும் தாண்டி பொதுமக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று அதிக நாட்கள் ஓடியது மட்டுமில்லாமல் 100 கோடிக்கு மேல் வசூலில் வெற்றி கண்டது. இதனை தொடர்ந்து இளம் இயக்குனர் அருண் மாதேஸ்வரனுடன் கூட்டணி அமைத்து கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
படத்தின் பிரியங்கா அருள் மோகன், சந்திப் கிஷன், ஜான் கொக்கின் மற்றும் பல முன்னணி நடிகர்கள், நடிகைகள் நடித்துள்ளனர் இந்த படம் மிகப்பெரிய ஒரு ஆக்சன் பேக்ஸ் திரைப்படமாக உருவாகியுள்ளது அண்மையில் கூட இந்த படத்தின் டீசர் வெளிவந்து பட்டையை கிளப்பியது. கேப்டன் மில்லர் படத்தை வெற்றிகரமாக முடித்ததை தொடர்ந்து தனது இரு மகன்களுடன் திருப்பதி கோயிலுக்கு..
சென்று தனுஷ் மொட்டை அடித்த புகைப்படம் பெரிய அளவில் பேசப்பட்டது சில தினங்களுக்கு முன் தனுஷ் பிறந்த நாளும் கோலாகலமாக நடந்தது இந்த நிலையில் கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு தனுஷ் வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பது குறித்து தகவல் கிடைத்திருக்கிறது.
அதன்படி பார்வையில் கேப்டன் மில்லர் படத்திற்காக தனுஷ் சுமார் 20 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக பேச்சுக்கள் உலாவுகின்றன ஆனால் இது இன்னும் உறுதியாக சொல்லப்படவில்லை. விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்தாலும் சம்பளத்தை மற்றும் தனுஷ் உயர்த்தாமல் இருக்கிறார் என கூறி பாராட்டி வருகின்றனர்.