50 நாட்களைக் கடந்த தனுஷின் “திருச்சிற்றம்பலம் படம்” – தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடி வசூலா.?

dhanush
dhanush

இப்பொழுது இருக்கும் நடிகர்கள் ஒன்னு ரெண்டு படங்களை ஹிட் கொடுத்து விட்டாலே ஓவராக சீன் போடுவார்கள் ஆனால் நடிகர் தனுஷ் இதிலிருந்து முற்றிலுமாக மாறுபட்டவர் அவரது படங்களுக்கு கிட்ட அடித்தாலும் சரி தோல்வியை சந்தித்தாலும் சரி ஒரே மாதிரியாக ரியாக்ட் பண்ணக்கூடியவர்.

நடிகர் தனுஷ் அண்மைகாலமாக நல்ல கதைகளை தேர்வு செய்து தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வருகிறார் அந்த படங்களும் பிரம்மாண்டமான வெற்றியை ருசிகின்றன அந்த வகையில் மித்திரன் ஆர் ஜவஹர் உடன் கைகோர்த்து தனுஷ் நடித்த திரைப்படம் திருச்சிற்றம்பலம். இந்த படம் முழுக்க முழுக்க ஒரே கிளாஸான படமாக உருவாகியது.

ஆனால் படம் ரசிகர்களுக்கும் மக்களுக்கும் ரொம்ப பிடித்து போகவே இந்த படத்தை  கொண்டாடினார் மேலும் நல்ல விமர்சனத்தை பெற்று இந்த படம் சூப்பராக ஓடியது அதன் காரணமாக ஆரம்பத்திலேயே வசூலும் நன்றாகவே அள்ளியது. திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் தனுஷ் உடன் கைகோர்த்து நித்தியா மேனன், பிரியா பவானி சங்கர்,  ராசி கண்ணா, பாரதிராஜா, பிரகாஷ்ராஜ்.

மற்றும் முனிஷ்காந்த், ஸ்டாண்டர்ட் செல்வா, ராமசாமி, விக்ரம் ராஜா, ரேவதி, ஸ்ரீரஞ்சனி போன்ற பலர் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் கனகச்சிதமாக நடித்திருந்தனர் இந்த படம் ஒட்டுமொத்தமாக கிட்டத்தட்ட 100 கோடி வசூல் செய்தது தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிய இந்த திரைப்படம் ஒரு வழியாக 50 நாட்களைக் கடந்து இன்னும் போய்க்கொண்டிருக்கிறது.

இதுவரை மட்டுமே தமிழகத்தில் மட்டும் தனுஷின் திருச்சிற்றம்பலம் படம் 75 கோடி வசூல் செய்திருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து தனுஷின் நானே ஒருவன் திரைப்படம் அண்மையில் வெளிவந்தது ஆனால் தொடர்ந்து கலவையான விமர்சனத்தை பெற்று வருவதால் இந்த திரைப்படம் திருச்சிற்றம்பலம் படம் அளவுக்கு வசூல் அள்ளுமா என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..