வசூலில் படுத்தே விட்ட செல்வராகவனின் “பகாசூரன்” – 3 நாள் கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா.?

bakasuran
bakasuran

திரை உலகில் இயக்குனராகவும், இசையமைப்பாளராகவும் ஜொலித்த பலரும், இன்று ஹீரோக்களாக வெற்றிநடை போடுகின்றனர் அந்த வகையில் தமிழில் பல வெற்றி படங்களை கொடுத்து தவிர்க்க முடியாத இயக்குனர் என பெயர் எடுத்த செல்வராகவன் கடந்த சில வருடங்களாக நடிப்பில் அதிகம் கவனம் செலுத்துகிறார் முதலில் இவர் சாணி காயிதம் திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் உடன் இணைந்து நடித்தார்.

முதல் படத்திலேயே சிறந்த  நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதில் இடம் பிடித்தார். அதன் பின் விஜய்யின் பீஸ்ட் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.  அதனைத் தொடர்ந்து மோகன் ஜி இயக்கத்தில் உருவான “பகாசூரன்” திரைப்படத்தில் நடித்தார். படம் ஒரு வழியாக கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது.

மோகன் ஜி யின் முந்தைய படங்கள் எப்படி மக்களுக்கு நல்ல விழிப்புணர்வை கொடுத்ததோ அதேபோலவே தான் பகாசூரன் திரைப்படம் இருந்தது இதனால் ரசிகர்கள் மற்றும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை ஆரம்பத்திலேயே பெற்றது. தொடர்ந்து இந்த படத்திற்கு பாசிட்டிவான கமெண்ட்கள் தொடர்ந்து வருகின்றன. படத்தில் கதை முக்கியமானதாக இருந்தாலும்..

மறுபக்கம் அதற்கு ஏற்றார்போல செல்வராகவன், நட்டி நடராஜ், ராதாரவி போன்றவர்களும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் பின்னி இருந்தனர் இதனால் தொடர்ந்து சூப்பராக ஓடிக்கொண்டே இருக்கிறது முதல் நாளில் ஒரு கோடிக்கு மேல் வசூல் அள்ளியது அடுத்தடுத்த நாட்களிலும் வசூலில் கொஞ்சம் முன்னேற்றமும் இருந்து வருகிறது 3 நாட்கள் முடிவில் மட்டுமே இதுவரை சுமார் 5 கோடி வசூல் செய்துள்ளது.

வருகின்ற நாட்களில் பகாசூரன் படத்தின் வசூல் மாறும் என பலரும் சொல்லி வருகின்றனர்..   மோகன் ஜி யின் முந்தைய படங்கள் திரௌபதி, ருத்ர தாண்டவம் போன்ற படங்கள் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தியது அந்த அளவிற்கு பகாசூரன் திரைப்படம் வசூல் அள்ளுமா.? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..