நடிகர், நடிகைகளை பற்றி புட்டு புட்டு வைக்க பயில்வான் ரங்கநாதன் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா.? உண்மையை உடைத்த நடிகை

paiyilvan
paiyilvan

பயில்வான் ரங்கநாதன் தமிழ் சினிமா உலகில் காமெடியனாகவும், குணச்சித்திர கதாபாத்திரங்களில்  நடித்து பிரபலமடைந்தார் இவர் குறிப்பாக ரஜினி போன்ற டாப் நடிகரின் படங்கள் தான் அதிகம் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இப்படி ஓடிக்கொண்டிருந்த இவருக்கு வயது முதிர்வின் காரணமாக போகப் போக பட வாய்ப்புகள்..

குறைய ஆரம்பித்ததால் வேறு வழி இல்லாமல் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இதில் தனக்குத் தெரிந்த நடிகர் நடிகைகளை பற்றி பேசுவது மற்றும் அவர்களின் அந்தரங்க விஷயங்களையும் வெளிப்படையாக போட்டு உடைத்து வருகிறார் அதோடு மட்டுமல்லாமல் அவர் பத்திரிக்கையாளராகவும் நீண்ட காலமாக பணியாற்றி வருகிறார்.

இதனால் பயில்வான் ரங்கநாதனுக்கு நாலா பக்கமும் நல்ல காசு வருகிறது. இவர் நடிகர் நடிகைகளை பற்றி  பேசுவது  பரவாயில்லை ஆனால் அவர்களுடைய அந்தரங்க விஷயங்களைப் பற்றி பேசுவதால்  நடிகர் நடிகைகளும் இவரை பெரிய அளவில் விமர்சித்து தான் வருகின்றனர் ஆனால் அதை எல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல் பல பேட்டிகளில் பல நடிகர் நடிகைகளை பற்றி பேசி வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

இதற்காக அவர் பல ஆயிரம் சம்பளம் வாங்குவதாக ஏற்கனவே பல கிசு கிசுக்கள் இருந்த நிலையில் தற்போது அது குறித்து பிரபல நடிகை ஷகிலா வெளிப்படையாக கூறியுள்ளார் அதில் அவர் சொன்னது.. தன்னுடைய சேனலில் பேட்டி கொடுக்க எவ்வளவு காசு வாங்கினார் என்பதை போட்டு உடைத்துள்ளார்.

தன்னுடைய பேட்டியில் 60% சேகரித்த செய்திகளில் இருந்து 40% நானே வார்த்தைகளில் சேர்த்து பேசுகிறேன் என்று தெரிவித்திருந்தார். மேலும் 2000, 3000, 5000 ரூபாய்ன்னு காசு வாங்கி வாழ் வாராத்திற்காக தெரிவித்து வருகிறார் என்றும் தன் youtube சேனலில் கொடுத்த போட்டிக்கு  2000 ரூபாய் தான் காசு வாங்கினார் பயில்வான். இந்த உண்மையை கூற எனக்கு ரைட் இருக்கு என சகிலா கூறி உள்ளார்.