atlee : தமிழ் சினிமாவில் வெற்றி இயக்குனராக ஓடிக் கொண்டிருந்தவர் அட்லீ. இவர் முதலில் நயன்தாரா, ஆரியாவை வைத்து “ராஜா ராணி” என்னும் படத்தை எடுத்து வெற்றி கண்டார் அதனைத் தொடர்ந்து வசூல் மன்னனாக ஓடிய விஜயுடன் கைகோர்த்து தெறி, பிகில், மெர்சல் என அடுத்தடுத்த பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்த அட்லீ சினிமாவில் அசுர வளர்ச்சியை எடினார்.
மீண்டும் தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் , அஜித் போன்றவர்களை வைத்து படம் பண்ணுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென ஷாருக்கான் உடன் கூட்டணி அமைத்து “ஜவான்” என்னும் படத்தை எடுத்து வந்தார். படத்தில் நயன்தாரா, சானியா மல்கோத்ரா, பிரியாமணி, விஜய் சேதுபதி, யோகி பாபு மற்றும் பல பிரபலங்கள் நடித்தனர்.
படத்தின் படபிடிப்பு அனைத்தும் ஒரு வழியாக முடிவடைந்த நிலையில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து உள்ளது அண்மையில் படத்தின் டிரைலரும் வெளிவந்து மிரட்டியது இதில் ஷாருக்கான் பல்வேறு விதமான கெட்டப்புகளில் வந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து உள்ளார் மேலும் நயன்தாரா, விஜய் சேதுபதியின் லுக் மிரட்டலாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
டிரைலர் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகிறது இந்த நிலையில் படத்தில் அவருடைய பார்த்த ஷருக்கான் மிரண்டு போய்விட்டாராம் அந்த அளவிற்கு அட்லீ செம மாஸாக எடுத்து இருக்கிறார் என கூறப்படுகிறது.
இதனால் சந்தோஷமடைந்த ஷாருகான் அட்லீக்கு சம்பளத்தை அள்ளிக் கொடுத்துள்ளார் என சொல்லபடுகிறது. ஜவான் படத்திற்காக அட்லீ சுமார் 40 கோடி சம்பளம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது பாலிவுட்டில் முதல் படத்திற்கு 40 கோடி சம்பளம் வாங்கி இருக்கிறார். மேலும் காஸ்ட்லி இயக்குனராகவும் அவர் உருவெடுத்துள்ளார்.